சுவீடன் நாட்டு பிரதமரின் ஆலோசகராக மராட்டிய பெண் நியமனம்


சுவீடன் நாட்டு பிரதமரின் ஆலோசகராக மராட்டிய பெண் நியமனம்
x
தினத்தந்தி 7 Feb 2019 5:15 AM IST (Updated: 7 Feb 2019 3:05 AM IST)
t-max-icont-min-icon

சுவீடன் நாட்டு பிரதமராக இருப்பவர் ஸ்டீபன் லோவன். இவர் தனது அரசியல் ஆலோசகராக மராட்டியத்தை சேர்ந்த நிலா விகே பாட்டீலை நியமித்து உள்ளார்.

மும்பை,

32 வயதான நிலா விகே பாட்டீல், மராட்டியத்தில் கல்வியாளராக கருதப்படும் அசோக் விகே பாட்டீலின் மகள் ஆவார். மேலும் மராட்டிய சட்டசபை எதிர்க்கட்சி தலைவரான ராதாகிருஷ்ண விகே பாட்டீலின் மருமகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நிலா விகே பாட்டீல் சுவீடன் நாட்டில் பிறந்தவர். சிறுவயதில் அகமத்நகரில் வளர்ந்தார். சுவீடன் நாட்டு அரசியலில் தன்னை ஈடுபடுத்தி கொண்ட அவர், ஸ்டோக்லோம் மாநகராட்சி கவுன்சிலராக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story