கடலூரில் நகர்ப்புற வளர்ச்சி திட்ட விழிப்புணர்வு பேரணி


கடலூரில் நகர்ப்புற வளர்ச்சி திட்ட விழிப்புணர்வு பேரணி
x
தினத்தந்தி 7 Feb 2019 4:00 AM IST (Updated: 7 Feb 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

மகளிர் திட்டம் சார்பில் நகர்ப்புற வளர்ச்சி விழிப்புணர்வு பேரணியை கடலூர் கலெக்டர் அன்பு செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

கடலூர்,

கடலூர் மாவட்ட மகளிர் திட்டம் சார்பில் நகர்ப்புற வளர்ச்சி விழிப்புணர்வு பேரணி கடலூரில் நடைபெற்றது. டவுன்ஹாலில் இருந்து தொடங்கிய பேரணியை மாவட்ட கலெக்டர் அன்புசெல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பேரணியில் மகளிர் சுயஉதவிக்குழு பெண்கள் உள்பட 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு மத்திய அரசின் நகர்ப்புற வளர்ச்சிக்காக செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் தூய்மை இந்தியா திட்டம், அனைத்து வீடுகளிலும் தனிநபர் கழிப்பறைகள் கட்டும் திட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

முன்னதாக விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தி கோஷமிட்டபடி சென்றனர். பேரணி பாரதிசாலை வழியாக சென்று சில்வர் பீச் செல்லும் சாலை சிக்னலில் திரும்பி நெல்லிக்குப்பம் சாலை வழியாக சென்று அரசு மருத்துவமனையில் முடிவடைந்தது.

பேரணியில் திட்ட இயக்குனர் காஞ்சனா, உதவி திட்ட அலுவலர்கள் விஜயகுமார், ஆறுமுகம், நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் சுயஉதவிக்குழு பெண்கள், பகுதி அளவிலான கூட்டமைப்பு உறுப்பினர்கள், சமுதாய அமைப்பின் உறுப்பினர்கள், மகளிர் துப்புரவு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Next Story