சாத்தான்குளத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்


சாத்தான்குளத்தில் அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 7 Feb 2019 9:45 PM GMT (Updated: 2019-02-07T19:19:13+05:30)

சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சாத்தான்குளம்,

சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு போக்குவரத்து கழக பணிமனை

சாத்தான்குளத்தில் அரசு போக்குவரத்து கழக பணிமனை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இங்கிருந்து 6 பஸ்கள் இயக்கப்படுகிறது. இதற்கிடையே அரசு போக்குவரத்து கழகம் நஷ்டத்தில் இயங்குவதாக கூறி, சாத்தான்குளம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை மூடுவதாகவும், இதனை அரசு பஸ்களின் டயர்களை பராமரிக்கும் மையமாக மாற்றுவதாகவும், இங்கு பணியாற்றும் டிரைவர்கள், கண்டக்டர்களை திருச்செந்தூர் அரசு போக்குவரத்து கழக பணிமனைக்கு இடமாற்றம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அனைத்து கட்சியினர், பொதுமக்கள் நேற்று மதியம் சாத்தான்குளம் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோரிக்கை மனு

தி.மு.க. ஒன்றிய செயலாளர் ஜோசப் தலைமை தாங்கினார். நகர காங்கிரஸ் தலைவர் வேணுகோபால், வட்டார தலைவர் ஜனார்த்தனம், அ.ம.மு.க. ஒன்றிய செயலாளர் ராஜ்மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், ஜெயராமன், கூட்டுறவு சங்க தலைவர் லூர்துமணி, துணை தலைவர் ஜோசப் அலெக்ஸ், வியாபாரிகள் சங்க தலைவர் துரைராஜ், செயலாளர் மதுரம் செல்வராஜ், மனிதநேய நல்லிணக்க பெருமன்றம் பால்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள், துணை தாசில்தார் ரதி கலாவிடம் கோரிக்கை மனு வழங்கி விட்டு, கலைந்து சென்றனர்.


Next Story