குறும்புசேட்டை செய்த சிறுமியின் உடலில் சூடு வைத்த தாய் கைது
குறும்புசேட்டை செய்த சிறுமியின் உடலில் சூடு வைத்த தாயை போலீசார்கைதுசெய்தனர்.
தானே,
நவிமும்பை ரோட்பாலி பகுதியை சேர்ந்தவர் அனிதா யாதவ். இவரது கணவர் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். இவர்களுக்கு 5 வயதில் ஒரு மகள் இருக்கிறாள். சிறுமி வீட்டில் குறும்புத்தனம் செய்து வந்தாள். மேலும் தாயின் சொல்பேச்சு கேட்காமல் வீட்டின் வெளியே சென்று விளையாடி இருக்கிறாள். இது அனிதா யாதவுக்கு பிடிக்கவில்லை.
இதனால் கோபம் அடைந்த அவர் தனது கணவருடைய சகோதரரின் மனைவி ரிங்கி யாதவுடன் சேர்ந்து பெற்ற மகள் என்று கூட பாராமல் மெழுகுவர்த்தியால் உடலில் பல இடங்களில் சூடு போட்டு கொடுமைப்படுத்தி உள்ளார். இதில் சிறுமி வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்தாள்.
வேலைக்கு சென்ற கணவர் இரவு வீட்டிற்கு வந்ததும் மகள் அழுது கொண்டிருந்ததை பார்த்து விசாரிக்க அருகில் சென்றார். அப்போது மகளின் உடலில் தீக்காயங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதை பற்றி கேட்டபோது சிறுமி தனக்கு நடந்த அவலத்தை தந்தையிடம் தெரிவித்தாள்.
இது தொடர்பாக அவர் தனது மனைவி மற்றும் தனது சகோதரரின் மனைவி ஆகிய இருவர் மீதும் கலம்பொலி போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கொடுமைப்படுத்திய அவளது தாய் மற்றும் சித்தியை கைது செய்தனர்.
குறும்புசேட்டையை பொறுத்து கொள்ளமுடியாமல் பெற்ற மகளின் உடலில் சூடு வைத்து தாய் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story