மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் கணவன்-மனைவி உள்பட 3 பேர் பரிதாப சாவு


மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல் கணவன்-மனைவி உள்பட 3 பேர் பரிதாப சாவு
x
தினத்தந்தி 8 Feb 2019 3:00 AM IST (Updated: 8 Feb 2019 1:12 AM IST)
t-max-icont-min-icon

நாசிக்கில் மோட்டார் சைக்கிள்கள் மோதலில் கணவன், மனைவி உள்பட 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நாசிக்,

நாசிக்கில் யோலா-லசல்காவ் நெடுஞ்சாலையில் நேற்று இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்டன. இந்த பயங்கர விபத்தில் 2 மோட்டார் சைக்கிள்களில் சென்ற 4 பேர் கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் அவர்களை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் 3 பேர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அவர்கள் பெயர் சிந்தாமன் (வயது 55), அவரது மனைவி சுனந்தா மற்றும் பியூஷ் வாரே (20) என்று தெரியவந்தது. இவர்கள் அனைவரும் மாலேகாவ் தாலுகாவை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது.

மேலும் ரிஷிகேஷ் என்பவர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story