புதுவையில் மதுபானங்கள் மீதான கலால் வரி திடீர் உயர்வு ரூ.5 முதல் ரூ. 20 வரை மது பாட்டில்களின் விலை அதிகரிக்கும்


புதுவையில் மதுபானங்கள் மீதான கலால் வரி திடீர் உயர்வு ரூ.5 முதல் ரூ. 20 வரை மது பாட்டில்களின் விலை அதிகரிக்கும்
x
தினத்தந்தி 8 Feb 2019 4:31 AM IST (Updated: 8 Feb 2019 4:31 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் மது பானங்கள் மீதான கலால் வரி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் மது பாட்டி லின் விலை ரூ.5 முதல் ரூ.20 வரை அதிக ரிக்கும்.

புதுச்சேரி,

புதுவையில் 450-க்கும் மேற்பட்ட மதுபான கடை கள், 96 சாராயக்கடைகள், 75 கள்ளுக்கடைகள் உள்ளன. ரம், பிராந்தி, விஸ்கி, ஒயின், பீர், ஓட்கா என 1300-க்கும் மேற்பட்ட மதுவகைகள் விற்பனை செய்யப்படு கின்றன. அண்டை மாநில மான தமிழ்நாட்டை விட பல்வேறு மதுவகைகள் கிடைப்பதாலும் விலை குறைவாக இருப்பதாலும் புதுவைக்கு மது பிரியர்கள் அதிக அளவில் வருவது உண்டு.

இந்தியாவில் தயாரிக்கப் படும் வெளிநாட்டு மதுபானங்கள் (விஸ்கி, ரம், பிராந்தி) விலை குறைவானது, சாதாரணமானது, நடுத்தர மானது, விலை உயர்ந்தது என 4 பிரிவுகளாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் 2017-ம் ஆண்டுக்கு பிறகு தற்போது புதுவை அரசின் கலால்துறை திடீரென வரியை உயர்த்தி யுள்ளது. இதில் குவார்ட்டர் ஒரு கேஸ் (12 மது பாட்டில்கள்) ரூ.399 வரை உள்ள மதுபானங்களுக்கு ரூ.75 ஆக இருந்த கலால்வரி ரூ.93 ஆக உயர்த்தப் பட்டுள்ளது. நடுத்தர, விலை உயர்ந்த பிரிவுகள் என இரண்டையும் ஒருங்கிணைத்து ஒரு கேஸ் ரூ.400 முதல் ரூ.600க்கு மேலான மதுபானங் களுக்கு ரூ.100 ஆக இருந்த கலால்வரி ரூ.110 ஆகவும் தற்போது உயர்த்தப்பட் டுள்ளது.

இது குறித்து கலால்துறை அதிகாரியிடம் கேட்ட போது, புதுவையில் மதுபானங் களுக்கான கலால் வரி 2 ஆண்டுகளுக்கு பிறகு தற் போது உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசுக்கு மாதந்தோறும் ரூ.2 கோடி கூடுதல் வருமானம் கிடைக் கும். கலால் வரி உயர்வு காரணமாக குறைந்த மற்றும் சாதாரண விலை மதுபாட்டில் குவார்ட்டருக்கு ரூ.5-ம், முழு பாட்டில் ரூ. 15 வரையிலும் விலை உயர வாய்ப்பு உள்ளது. உயர்ந்தவிலை முழு மதுபாட்டில் ரூ. 20 வரை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்தார்.

Next Story