மாவட்ட செய்திகள்

திருச்செங்கோட்டில்ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் + "||" + In tiruccenkot Coconut powder auction for Rs 5 lakh

திருச்செங்கோட்டில்ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

திருச்செங்கோட்டில்ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
திருச்செங்கோட்டில் ரூ.5 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
திருச்செங்கோடு,

திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்று வருகிறது.

இதேபோல் நேற்று பரமத்திவேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, கந்தம்பாளையம், மொளசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து மொத்தம் 100 மூட்டைகளில் தேங்காய் பருப்புகளை தென்னை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். அவற்றை ஈரோடு மாவட்டம் முத்தூர், வெள்ளக்கோவில், கோபிசெட்டிபாளையம் மற்றும் வெண்ணந்தூர், சேலம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த தேங்காய் பருப்பு வியாபாரிகள் கலந்து கொண்டு போட்டி போட்டு ஏலம் எடுத்தனர்.

அப்போது முதல் தரம் ரூ.84.15 முதல் ரூ.105.15 வரையிலும், 2-ம் தரம் ரூ.61.75 முதல் ரூ.70.75 வரையிலும் வியாபாரிகள் போட்டி போட்டு ஏலம் எடுத்தனர். மொத்தம் 100 மூட்டை தேங்காய் பருப்புகள் ரூ.5 லட்சத்திற்கு ஏலம் போனது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை உயர்வு
பரமத்திவேலூரில் தேங்காய் பருப்பு விலை உயர்ந்து உள்ளது.
2. பரமத்திவேலூரில் ஏலம்: தேங்காய் பருப்பு விலை குறைந்தது
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள நாமக்கல் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று நடைபெற்ற தேங்காய் பருப்பு ஏலத்தில் அதன் விலை குறைந்தது.
3. பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை குறைந்தது
பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பின் விலை குறைந்தது.
4. பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை சரிவு
பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு விலை சரிவடைந்தது.
5. பரமத்திவேலூரில் தேங்காய் பருப்பு வரத்து அதிகரிப்பு விலையும் உயர்ந்தது
பரமத்தி வேலூரில் தேங்காய் பருப்பு வரத்து அதிகரித்ததோடு, அதன் விலையும் உயர்ந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.