புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடந்த இருந்த சாலைமறியல் ஒத்திவைப்பு


புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடந்த இருந்த சாலைமறியல் ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 9 Feb 2019 4:00 AM IST (Updated: 9 Feb 2019 2:58 AM IST)
t-max-icont-min-icon

மன்னார்குடி அருகே கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நடந்த இருந்த சாலைமறியல் போராட்டம், துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஒத்தி வைக்கப்பட்டது.

சுந்தரக்கோட்டை,

கஜா புயலால் பாதிக்கப்பட்டு 80 நாட்கள் ஆகியும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்கக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மன்னார்குடி ஒன்றியம் ஆலங்கோட்டை, உள்ளிக்கோட்டை, மேலநெம்மேலி, மகாதேவப்பட்டிணம் ஆகிய 4 இடங்களில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடத்த அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெறும் இடமான ஆலங்கோட்டைக்கு சென்ற மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் அங்கு மறியலில் ஈடுபடுவதற்காக குழுமியிருந்த இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் மாலாபாண்டியன், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்திற்கு திடீரென கவர்னர் வந்துள்ளார். இதனால் உதவி கலெக்டர், தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகள் அனைவரும் வெளியில் சென்றுள்ளார்கள். உங்கள் கோரிக்கை குறித்து தனி அதிகாரியை நியமித்து அனைவருக்கும் நிவாரணம் மற்றும் நிவாரண பெட்டகம் வழங்கிட கணக்கெடுப்பு நடத்தி பெற்றுத்தர ஏற்பாடு செய்கிறோம் என்று தெரிவித்தார். அதனையடுத்து சாலை மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் மகேந்திரன் தெரிவித்தார்.

Next Story