உடுப்பியில் கிண்டல் செய்த வாலிபரை ‘ஷூ’வால் அடித்த இளம்பெண் சமூகவலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ
இளம்பெண்ணை வாலிபர் கேலி- கிண்டல் செய்து தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், அந்த வாலிபரை தனது காலில் அணிந்திருந்த ‘ஷூ’வை கழட்டி சரமாரியாக தாக்கினார்.
பெங்களூரு,
உடுப்பி டவுனை சேர்ந்தவர் 23 வயது இளம்பெண். இவரை அதே பகுதியை சேர்ந்த வாலிபர் அடிக்கடி கேலி-கிண்டல் செய்தபடி இருந்துள்ளார். அதுபோல் நேற்று காலையும் ரோட்டில் நடந்து சென்றுகொண்டிருந்த அந்த இளம்பெண்ணை வாலிபர் கேலி- கிண்டல் செய்து தொல்லை கொடுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண், அந்த வாலிபரை சகட்டுமேனிக்கு திட்டியதுடன், தனது காலில் அணிந்திருந்த ‘ஷூ’வை கழட்டி சரமாரியாக தாக்கினார்.
இதனை அந்தப் பகுதி மக்கள் கூடி நின்று வேடிக்கை பார்த்தனர். இதில் அந்த வாலிபர் காயமடைந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் உடுப்பி டவுன் போலீசார் விரைந்து வந்து வாலிபரை மீட்டனர். போலீஸ் விசாரணையில் வாலிபர் மன நலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை உடுப்பி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இந்த சம்பவம் தொடர்பாக இளம்பெண் தரப்பிலோ அல்லது வாலிபர் தரப்பிலோ போலீசில் புகார் கொடுக்கப்படவில்லை. தற்போது இளம்பெண், வாலிபரை தாக்கிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story