பேரிகை அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி 2 பேர் படுகாயம்
பேரிகை அருகே மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் பேரிகை அருகே உள்ள குடிசாதனப்பள்ளி பக்கமுள்ளது கரிசந்திரம். இந்த ஊரை சேர்ந்தவர் எம்ஜி (வயது 59). கூலித்தொழிலாளி. சம்பவத்தன்று இவர் பேரிகை - தீர்த்தம் சாலையில் உள்ள தனியார் நிறுவனம் அருகில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்தவர் எதிர்பாராதவிதமாக எம்ஜி மீது மோதினார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவர் பெங்களூரு அரசு ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி எம்ஜி பரிதாபமாக உயிரிழந்தார்.
மோட்டார்சைக்கிளில் சென்ற பேரிகை மாஸ்தி சாலையை சேர்ந்த விக்னேஷ் (23), கரிசந்திரம் தர்மன் (20) ஆகிய 2 பேரும் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விபத்து குறித்து பேரிகை போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) முருகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story