மாவட்ட செய்திகள்

பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு: போலீசார் தேடிய மேலும் 3 பேர் கைது + "||" + PMK. Murder case: 3 more people arrested by police

பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு: போலீசார் தேடிய மேலும் 3 பேர் கைது

பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கு: போலீசார் தேடிய மேலும் 3 பேர் கைது
திருவிடைமருதூர் அருகே நடந்த பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் மேலும் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவிடைமருதூர்,

தஞ்சை மாவட்டம் திருபுவனம் மேலதூண்டி விநாயகம் பேட்டையை சேர்ந்தவர் ராமலிங்கம்(வயது 42). பா.ம.க. முன்னாள் நகர செயலாளரான இவரை கடந்த 5-ந் தேதி இரவு ஒரு கும்பல் அரிவாளால் வெட்டி படுகொலை செய்தது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவிடை மருதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்புதீன், நிஜாமுதீன், அசாருதீன், ரிஸ்வான், முகமது ரியாஸ் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தீவிர தேடுதல் நடத்தி ஆவணியாபுரத்தை சேர்ந்த முகமது தவுபிக்(24), முகமது பர்வீஸ்(26), தவ்கீத் பாட்சா(26) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர்.

பா.ம.க. பிரமுகர் கொலை வழக்கில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.