அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
திருவாரூர் அருகே அனைவருக்கும் புயல் நிவாரணம் வழங்கக்கோரி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
திருவாரூர்,
திருவாரூர் அருகே உள்ள அடியக்கமங்கலத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முறையாக நிவாரணம் வழங்கப்படவில்லை எனவும், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் அடியக்கமங்கலம் கடைவீதியில் கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டனர். போராட்டத்திற்கு த.மு.மு.க. மாவட்ட தலைவர் பஜ்ஜிலுல்ஹக், மாவட்ட செயலாளர் நவாஸ் முன்னிலை வகித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் திருவாரூர் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன், சப்-இன்ஸ்பெக்டர் சிவசெந்தில்குமார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலைமறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் உறுதியளித்தனர். இதனையடுத்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் திருவாரூர்-நாகை சாலையில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story