குரங்கு காய்ச்சலால் உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம்
சிவமொக்காவில் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு மந்திரி சிவானந்த பட்டீல் தனது சொந்த பணத்தில் தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கி உள்ளார்.
சிவமொக்கா,
சிவமொக்கா மாவட்டத்தில் குரங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. மாவட்டத்தில் சிவமொக்கா தவிர மற்ற 6 தாலுகாக்களிலும் குரங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக சாகர் தாலுகாவில் இதுவரை குரங்கு காய்ச்சலுக்கு 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் 100-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
வனப்பகுதியில் கே.எப்.டி. வைரஸ் தாக்கி சாவும் குரங்குகளால் இந்த நோய் பரவுவதாக சுகாதார துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் வனப்பகுதியில் செத்து கிடக்கும் குரங்குகளை உடனடியாக அப்புறப்படுத்தி எரிக்கும் பணியில் சுகாதார துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில், குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா வாட்டமக்கி கிராமத்தை சேர்ந்த சவிதா நாராயண், தொம்பைக்கே கிராமத்தை சேர்ந்த லட்சுமி தேவி ஆகியோரின் குடும்பத்தினருக்கு மாநில சுகாதார துறை மந்திரி சிவானந்த பட்டீல், தனது சொந்த பணத்தில் இருந்து தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்குவதாக தெரிவித்து இருந்தார்.
அதன்படி மந்திரி சிவானந்த பட்டீல் சார்பில் 2 பேரின் குடும்பத்தினருக்கும் நேற்று முன்தினம் தலா ரூ.1 லட்சத்துக்கான காசோலையை முன்னாள் மந்திரி காகோடு திம்மப்பா வழங் கினார்.
Related Tags :
Next Story