நாகை மாவட்டத்தில் 4½ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை கலெக்டர் சுரேஷ்குமார் தகவல்
நாகை மாவட்டத்தில் 4½ லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் சுரேஷ்குமார் கூறினார்.
நாகப்பட்டினம்,
நாகையில் அரசு உதவிபெறும் நடராஜன் தமயந்தி உயர்்நிலைப்பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் குடற்புழு நீக்கும் மாத்திரைகள் வழங்கும் முகாம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் தலைமை தாங்கி முகாமை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
1 முதல் 19 வயதிற்குட்பட்ட அனைவருக்கும் இலவசமாக குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. நாகை மாவட்டத்தில் சுமார் 4 லட்சத்து 50 ஆயிரத்து 131 குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு அந்த பள்ளியில் உள்ள பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் மூலம் மதிய உணவிற்கு பிறகு ஆசிரியர் முன்னிலையில் கொடுக்கப்பட உள்ளது.
பள்ளி செல்லா குழந்தைகளுக்கு அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங்கப்படும்.
மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் 19 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. சோர்வு மற்றும் பசியின்மை ரத்த சோகை, குமட்டல், வாந்தி, வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வைட்டமின் “யு“ குறைபாடு ஆகியவை குடற்புழு தொற்றினால் ஏற்படும் பாதிப்புகள் ஆகும். உணவு உட்கொள்ளும் முன் கைகளை நன்றாக சோப்பு போட்டு கழுவு வேண்டும். கொதிக்க வைத்து ஆறிய நீரையே பருக வேண்டும். காய்கறிகள் மற்றும் பழங்களை நன்றாக கழுவிய பின் உட்கொள்ள வேண்டும். குடற்புழு நீக்க மாத்திரைகள் ரத்தசோகையை தடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது. அறிவுத்திறன் மற்றும் உடல் வளர்ச்சியை மேம்படுத்தவும் ஆரோக்கியமாக இருக்கவும் உதவுகிறது. இந்த முகாமில் விடுபட்ட குழந்தைகளுக்கு வருகிற 14-ந்தேதி (வியாழக்கிழமை) சிறப்பு முகாம் நடத்தப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
இதில் நாகை உதவி கலெக்டர் கமல்கிஷோர், துணை இயக்குனர் (சுகாதாரப் பணிகள்) சாந்தி, உதவி திட்ட மேலாளர் ஜெயபாஜேசியா டேனியல், வட்டார மருத்துவ அலுவலர் அறிவொளி, நாகை தாசில்தார் இளங்கோவன் மற்றும் அரசு அலுவலர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story