நாமக்கல்லில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு ஊர்வலம் போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தொடங்கி வைத்தார்
நாமக்கல்லில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு குறித்து மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது. இதை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு தொடங்கி வைத்தார்.
நாமக்கல்,
சாலை பாதுகாப்பு வாரவிழாவை முன்னிட்டு நாமக்கல் நகர காவல்துறை மற்றும் கவிஞர் ராமலிங்கம் அரசு பெண்கள் கல்லூரி ஆகியவை இணைந்து நேற்று முன்தினம் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு இருசக்கர வாகன ஊர்வலத்தை நடத்தின. இந்த ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.
பின்னர் அவர் மோட்டார்சைக்கிள்களில் ‘ஹெல்மெட்’ விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கரை ஒட்டினார்.
கல்லூரி நுழைவு வாயில் முன்பு தொடங்கிய இந்த ஊர்வலம் திருச்சி சாலை, மணிக்கூண்டு, பரமத்தி சாலை, கோட்டை சாலை, நேதாஜி சிலை, பஸ்நிலையம் வழியாக சென்று நாமக்கல் பூங்கா சாலையில் முடிவடைந்தது. இதில் கல்லூரி பேராசிரியைகள், மாணவிகள் மற்றும் பெண் போலீசார் விழிப்புணர்வு பதாகைகளுடன் ‘ஹெல்மெட்’ அணிந்து ஊர்வலமாக சென்றனர்.
இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், கல்லூரி முதல்வர் சுகுணா, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் வெங்கடேசன், இளமுருகன், இந்திய மருத்துவ சங்கத்தின் நாமக்கல் கிளை தலைவர் டாக்டர் ரெங்கநாதன், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் ரெங்கநாதன், ராமதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story