5 மற்றும் 8–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்


5 மற்றும் 8–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு அரசு பரிசீலிப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தகவல்
x
தினத்தந்தி 10 Feb 2019 4:30 AM IST (Updated: 10 Feb 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

5 மற்றும் 8–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த அரசு பரீசிலிப்பதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

கடத்தூர்,

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள குள்ளம்பாளையம், கலிங்கியம் ஊராட்சிகளில் கால்நடை துறை சார்பில் பயனாளிகளுக்கு விலையில்லா ஆடுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் கதிரவன் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். அதைத்தொடர்ந்து 829 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 57 லட்சம் மதிப்பிலான விலையில்லா ஆடுகளை அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆகியோர் வழங்கினார்கள்.

அதன்பின்னர் கோபி கரட்டூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நுழைவு வாயிலை அமைச்சர்கள் பார்வையிட்டனர்.

முன்னதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–

கோபி கரட்டூரில் புதிதாக கட்டப்பட்டு வரும் எம்.ஜி.ஆர். நுழைவு வாயிலில் முன்னாள் முதல் அமைச்சர் காமராஜர் பெயர் பொறித்த கல்வெட்டு அமைக்கப்பட உள்ளது. இந்த அரசு காமராஜருக்கு புகழ் சேர்க்கும் விதமாக செயல்பட்டு வருகிறது. தேசத்தலைவர்களை மதிக்கும் அரசாக உள்ளது.

காமராஜர் பிறந்த நாளில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. சுற்றுச்சூழல் துறையில் பல்வேறு மாற்றங்கள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தூய்மை பாரதம் என்று சொல்லப்பட்டாலும், தமிழகம் பாலித்தீன் இல்லாத மாநிலமாக உருவாகி வருகிறது.

1200 பள்ளிக்கூடங்களில் தலா ரூ.20 லட்சம் செலவில் மத்திய அரசின் உதவியுடன் அறிவியல் ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன.

வரும் கல்வி ஆண்டில் 1 முதல் 8–ம் வகுப்பு வரை உள்ள மாணவ–மாணவிகளுக்கு புதிய வண்ணச் சீருடைகள் வழங்கப்படும்.

பள்ளிக்கு மாணவ–மாணவிகளின் வருகையை தெரிந்துகொள்ள சோதனை முறையில் பயோ மெட்ரிக் முறை நடைமுறை படுத்தப்பட்டுள்ளது. 5 மற்றும் 8–ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசு பரிசீலனை செய்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உடன் அமைச்சர் கே.சி.கருப்பணன், நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ், நம்பியூர் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர் தம்பி சுப்பிரமணியம் ஆகியோர் உடன் இருந்தார்கள்.


Next Story