கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி பலி


கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது வி‌ஷவாயு தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 10 Feb 2019 4:13 AM IST (Updated: 10 Feb 2019 4:13 AM IST)
t-max-icont-min-icon

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் காதர்பாட்ஷா.

அருப்புக்கோட்டை,

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் காதர்பாட்ஷா. அவருடைய வீட்டில் 10 அடி ஆழம் உடைய கழிவுநீர் தொட்டி (செப்டிக்டேங்) உள்ளது. இதனை சுத்தம் செய்யும் பணியில் அருப்புக்கோட்டையை சேர்ந்த தொழிலாளிகள் டி.சபரிநாதன் (வயது 30), சி.ராஜபாண்டி 31) ஆகியோர் ஈடுபட்டனர். அப்போது திடீரென 2 பேரையும் வி‌ஷவாயு தாக்கியது. இதில் சம்பவ இடத்திலேயே சபரிநாதன் பரிதாபமாக இறந்தார். ராஜபாண்டி மயக்கம் அடைந்தார். இதனை அந்த வழியாக சென்ற ராமர் என்பவர் கண்டு அலறினார். அந்த சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பரளச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். உயிருக்கு போராடிய ராஜபாண்டியை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story