சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா: ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு


சாலை பாதுகாப்பு வார நிறைவு விழா: ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம் போலீஸ் சூப்பிரண்டு பங்கேற்பு
x
தினத்தந்தி 11 Feb 2019 4:15 AM IST (Updated: 10 Feb 2019 9:47 PM IST)
t-max-icont-min-icon

சாலை பாதுகாப்பு வார நிறைவு விழாவில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார்சைக்கிள் ஊர்வலத்தை போலீஸ் சூப்பிரண்டு சிபி சக்ரவர்த்தி தொடங்கி வைத்தார்.

திருவண்ணாமலை,

சாலை பாதுகாப்பு வார விழா கடந்த 4-ந் தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி உத்தரவின் பேரில் ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம், சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்ற துண்டு பிரசுரம் வழங்குதல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.

இந்த நிலையில் சாலை பாதுகாப்பு வார விழாவின் நிறைவு நாளான நேற்று போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் திருவண்ணாமலை ஈசான்ய மைதானத்தில் இருந்து ஹெல்மெட் விழிப்புணர்வு மோட்டார் சைக்கிள் ஊர்வலம் நடந்தது.

ஊர்வலத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிபிசக்ரவர்த்தி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை முன்னிலை வகித்தார். மோட்டார் சைக்கிள் ஊர்வலத்தில் போலீசார், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக போக்குவரத்து ஆய்வாளர் ராம்குமார் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி வாசிக்க போலீஸ் சூப்பிரண்டு மற்றும் போலீசார், பொதுமக்கள் உறுதிமொழி ஏற்றனர்.

Next Story