ஹலியால் அருகே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தொழில்அதிபர் தற்கொலை காருக்குள் பிணமாக கிடந்தார்
ஹலியால் அருகே துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தொழில் அதிபர் தற்கொலை செய்துகொண்டார். இவர் காருக்குள் பிணமாக கிடந்தார்.
மங்களூரு,
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
உத்தரகன்னடா மாவட்டம் ஹலியால் தாலுகா கானாப்பூர்-தாளகொப்பா தேசிய நெடுஞ்சாலையில் நேற்று காலை ஒரு கார் நீண்ட நேரமாக நின்று ெகாண்டிருந்தது. இதனால் சந்தேக மடைந்த அந்தப்பகுதி மக்கள் ஹலியால் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். அப்போது காருக்குள் ஒருவர் பிணமாக கிடப்பதை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் ேபாலீசார், காரில் இருந்தவரின் உடலை மீட்டனர். அப்போது அவருடைய கையில் துப்பாக்கி இருந்தது. தலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்திருந்தது. இதனால் அவர் துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் அவருடைய உடலை மீட்டு ஹலியால் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், அவர் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புராவை சேர்ந்த மஞ்சுநாத் வாசு என்பதும், அவர் தொழில் அதிபர் என்பதும் தெரியவந்தது.
அவர் நேற்று முன்தினம் இரவு காரில் இங்கு வந்து துப்பாக்கியால் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது. அவர் எதற்காக தற்கொலை செய்துகொண்டார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து ஹலியால் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story