ஹெல்மட் அணியாமல் வந்தவரை பிடிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் கவலைக்கிடம்


ஹெல்மட் அணியாமல் வந்தவரை பிடிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதி போலீஸ்காரர் கவலைக்கிடம்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:00 PM GMT (Updated: 10 Feb 2019 7:37 PM GMT)

பாந்திராவில் ஹெல்மட் அணியாமல் வந்தவரை பிடிக்க முயன்ற போது மோட்டார் சைக்கிள் மோதியதில் போலீஸ்காரர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தார். அவர் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடி கொண்டிருக்கிறார்.

மும்பை,

மும்பை பாந்திரா மேற்கு கார்டர் ரோடு பகுதியில் நேற்று முன்தினம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில், வாலிபர் ஒருவர் ஹெல்மட் அணியாமல் வந்து கொண்டிருந்தார். இதை கவனித்த போலீஸ்காரர் ஜமாதார் என்பவர் அவரை பிடித்து அபராதம் விதிப்பதற்காக நடுரோட்டில் சென்று வழிமறித்தார்.

ஆனால் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்தவர் நிறுத்தாமல், வந்த வேகத்தில் போலீஸ்காரர் மீது பலமாக மோதினார். இதில் போலீஸ்காரர் ஜமாதார் தூக்கி வீசப்பட்டார்.

மேலும் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த வாலிபரும் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மற்ற போலீசார் இருவரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு போலீஸ்காரர் ஜமாதாரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

படுகாயம் அடைந்த வாலிபருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story