திருப்போரூர், பள்ளிப்பட்டில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம்
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட காலவாக்கம், கண்ணாகபட்டு, தையூர், திருப்போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திருப்போரூர் தாசில்தார் ராஜ்குமார் தலைமையில் வாக்குப்பதிவு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
திருப்போரூர்,
துணை தாசில்தார் ஸ்ரீதர் மற்றும் வருவாய் அலுவலர்கள் கலந்துகொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். வாக்களிப்பது எப்படி? தாம் அளித்த வாக்கினை உறுதி செய்வது போன்றவற்றை பதிவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு முகாமுக்கு பள்ளிப்பட்டு தாசில்தார் சரவணன் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் ஆறுமுகம் தலைமையில் அமைக்கப்பட்ட குழு நேற்று குமார மங்களம் கிராமத்தில் வாக்காளர்களுக்கு பயிற்சி அளித்தது.இதில் திரளான வாக்காளர்கள கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வருவாய் ஆய்வாளர் குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story