மாவட்ட செய்திகள்

வரதராஜன்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு + "||" + 10 poue jewelry - silver plagues by breaking the house lock near Varadarajanpet

வரதராஜன்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு

வரதராஜன்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு
வரதராஜன்பேட்டை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை- வெள்ளி பொருட்கள் திருட்டு போனது.
வரதராஜன்பேட்டை, 

அரியலூர் மாவட்டம், வரதராஜன்பேட்டை அருகே ஆண்டிமடம்- விருத்தாசலம் சாலை பகுதியை சேர்ந்தவர் திருஞானசம்பந்தம். இவர் பி.எஸ்.என்.எல். அதிகாரியாய் இருந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி காந்திமதி. இருவரும் தனியாக வீட்டில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி வெளியூரில் தனிதனியே வசித்து வருகின்றனர். இந்த நிலையில் பெங்களூருவில் வசிக்கும் மகன் வீட்டிற்கு 2 மாதத்துக்கு ஒரு முறை கணவன்- மனைவி இருவரும் சென்று வருவது வழக்கம். கடந்த 10 நாட்களுக்கு முன்பு இருவரும் வீட்டை பூட்டி விட்டு பெங்களூருவிற்கு சென்றனர். இந்நிலையில் திருஞானசம்பந்தம் வீட்டின் அருகே வசிக்கும் உறவினர், அவரது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக ஆண்டிமடம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

நகை- பணம் திருட்டு

இதுகுறித்து பெங்களூருவில் இருந்த திருஞானசம்பந்தத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரல்ரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது. மோப்பநாய் டிக்சி வரவழைக்கப்பட்டது. அந்த நாய் வீட்டில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றுவிட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பெங்களூருவில் இருந்து வந்த திருஞானசம்பந்தம் வீட்டின் அறையில் இருந்த பீரோவில் வைத்திருந்த 10 பவுன் நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.10 ஆயிரம் மற்றும் எல்.இ.டி. டி.வி. ஆகியவை திருட்டுபோனது கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டில் யாரும் இல்லாததை அறிந்து கொண்டு மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து ஆண்டிமடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூரில் பட்டப்பகலில் துணிகரம்: கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் ரூ.14 லட்சம் திருட்டு மர்ம ஆசாமிகள் கைவரிசை
திருப்பூரில் பட்டப்பகலில் கலெக்டர் அலுவலக பெண் ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து ரூ.14 லட்சத்தை மர்ம ஆசாமிகள் துணிகரமாக திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
2. திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்பட 22 பேர் கைது
பெங்களூருவில் திருட்டு, கொள்ளையில் ஈடுபட்ட பெண் உள்பட 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.61 லட்சம் மதிப்பிலான நகைகள், வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளன.
3. தஞ்சை திருமண மண்டபத்தில் மணமகளுக்கு சொந்தமான 60 பவுன் நகை திருட்டு
தஞ்சை திருமண மண்டபத்தில் மணமகளுக்கு சொந்தமான 60 பவுன் நகையை திருடிச் சென்ற மர்மநபர், போலீசாரை கண்டதும் நகையை போட்டுவிட்டு தப்பி சென்றுவிட்டார்.
4. பண்ருட்டியில், ஆசிரியர் தம்பதி வீட்டில் திருடிய வாலிபர் கைது
பண்ருட்டியில் ஆசிரியர் தம்பதி வீட்டில் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
5. அரக்கோணம் அருகே, 2 டாஸ்மாக் கடைகளில் ரூ.1½ லட்சம் கொள்ளை - பூட்டுகளை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை
அரக்கோணம் அருகே 2 டாஸ்மாக் கடைகளில் பூட்டை உடைத்து மர்மநபர்கள் ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்துச்சென்றுள்ளனர்.