அரியலூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்


அரியலூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்
x
தினத்தந்தி 10 Feb 2019 10:30 PM GMT (Updated: 10 Feb 2019 8:01 PM GMT)

அரியலூரில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

அரியலூர், 

அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் உத்தரவின் பேரில் சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி அரியலூர் பஸ் நிலையம் அருகே போலீசார் சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு கூடுதல் போலீஸ் துணை சூப்பிரண்டு பெரியய்யா தலைமை தாங்கி, கொடியசைத்து ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். இந்த ஊர்வலம் தேரடி, சத்திரம், திருச்சி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, வாரச்சந்தை வழியாக சென்று அண்ணா சிலை அருகே முடிவடைந்தது. மேலும் இருசக்கர வாகனம் ஓட்டும் போது ஹெல்மெட் அணிய வேண்டும். சாலை விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்.

துண்டுபிரசுரங்கள்

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டக்கூடாது. காரில் செல்லும் போது சீட் பெல்ட் அணிய வேண்டும். பஸ்சில் பயணம் செய்யும் போது படியில் நின்று பயணம் செய்ய கூடாது. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது. ஒரு மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்ல கூடாது என்பன உள்பட பல்வேறு விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டுபிரசுரங்கள் பொதுமக்கள், வாகன ஓட்டிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் பங்கேற்ற போலீசார் ஹெல்மெட் அணிந்தவாறு இருசக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்த ஊர்வலத்தில் அரியலூர் சரக துணை போலீஸ் சூப்பிரண்டு மோகன்தாஸ், போலீஸ் இன்ஸ்பெக்டர்அழகேசன், ராம்கோ சிமெண்டு முருகானந்தம் மற்றும் போலீசார், சிமெண்டு ஆலை ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story