மாவட்ட செய்திகள்

நம்பியூரில் பதுக்கி வைத்து மது விற்பனை: 3 கடைகளுக்குள் புகுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள் 4 ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம் + "||" + Selling and selling wine Enter into 3 shops Crushed civilians

நம்பியூரில் பதுக்கி வைத்து மது விற்பனை: 3 கடைகளுக்குள் புகுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள் 4 ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்

நம்பியூரில் பதுக்கி வைத்து மது விற்பனை: 3 கடைகளுக்குள் புகுந்து அடித்து நொறுக்கிய பொதுமக்கள் 4 ஆண்டுகளாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரம்
நம்பியூரில் பதுக்கி வைத்து மதுவை விற்ற 3 கடைகளுக்குள் பொதுமக்கள் புகுந்து அடித்து நொறுக்கினர். கடந்த 4 ஆண்டுகளாக புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரம் அடைந்து பொதுமக்கள் இச்செயலில் ஈடுபட்டு உள்ளனர்.

நம்பியூர்,

ஈரோடு மாவட்டம் நம்பியூர் பேரூராட்சியில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இங்குள்ள பஸ் நிலையம் பின்புறம் உள்ள ஒரு வீதியில் சிலர் சட்டவிரோதமாக 3 மதுக்கடைகளை கடந்த 4 ஆண்டுகளாக நடத்தி வந்தனர். இந்த கடையில் டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்கள் வாங்கி வந்து பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்று வந்தனர். மேலும் இந்த 3 கடைகளின் அருகிலேயே அனுமதியின்றி பாரும் செயல்பட்டு வந்தது.

இதனால் மதுபிரியர்கள் இந்த மதுக்கடைக்கு வந்து மதுபாட்டில்களை வாங்கி அருகில் உள்ள பாரில் உட்கார்ந்து குடிப்பர். பலர் கடையின் அருகிலேயே மது குடித்துவிட்டு அங்கேயே போதையில் சுற்றித்திரிவர். அதுமட்டுமின்றி அந்த வழியாக வருவோர் போவோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ– மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

எனவே சட்டவிரோதமாக மதுவிற்பனை நடைபெறும் இந்த 3 கடைகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி புகார் அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் ஒன்று திரண்டு நேற்று இரவு 8 மணி அளவில் 3 மதுக்கடைகளை நோக்கி வந்தனர். இதுபற்றி அறிந்ததும் மதுக்கடையில் இருந்தவர்கள் அதை மூடிவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டனர். இதனால் மூடப்பட்ட 3 கடைகளின் முன்பும் பொதுமக்கள் கூடியிருந்தனர். மேலும் இதுகுறித்து நம்பியூர் போலீஸ் நிலையத்துக்கும் அவர்கள் தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் யாரும் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் 8.30 மணி அளவில் 3 கடைகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் அங்கிருந்த மதுபாட்டில்களை வெளியே தூக்கி வந்து கீழே போட்டு உடைத்தனர். அதுமட்டுமின்றி கடையில் இருந்த முட்டை உள்ளிட்ட உணவு பொருட்கள், மேஜை, நாற்காலி போன்றவற்றையும் உடைத்தனர்.

இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருக்க போலீசார் யாரும் சம்பவ இடத்துக்கு வரவில்லை. சம்பவம் நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் தான் போலீஸ் நிலையம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், ‘கடந்த 4 ஆண்டுகளாக நம்பியூர் பஸ்நிலையம் பின்புறம் இந்த 3 மதுக்கடைகளும் செயல்பட்டு வருகின்றன. இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி மாவட்ட நிர்வாகத்திடமும், நம்பியூர் போலீஸ் நிலையத்திலும் புகார் மனுக்கள் அளிக்கப்பட்டன. ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதேபோல் நம்பியூர் பகுதியில் 10–க்கும் மேற்பட்ட கடைகளில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெற்று வருகிறது. எனவே சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறும் இந்த கடைகளையும் மூட போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஒட்டுமொத்த பொதுமக்களை ஒன்று திரட்டி அந்த கடைகளையும் உடைத்து எறிவோம்,’ என்றனர்.

இதைத்தொடர்ந்து சட்டவிரோதமாக மதுவை விற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி அந்த பகுதியை சேர்ந்தவர்கள் நம்பியூர் போலீசில் புகார் மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். ஆனாலும் மதுபாட்டில்கள் உடைக்கப்பட்ட கடைக்கு போலீசார் கடைசி வரை செல்லவில்லை.

இந்த சம்பவத்தால் நம்பியூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

3 டாஸ்மாக் கடைகளின் பூட்டை உடைத்து அங்கிருந்த மதுபாட்டில்களை பொதுமக்கள் வெளியே கொண்டு வந்து தூக்கிப்போட்டு உடைத்து கொண்டிருந்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் ஏராளமான மது பிரியர்கள் அந்த 3 கடைகளுக்கும் ஓடோடி வந்தனர். அவர்கள் கடைக்கு வெளியே நின்று கொண்டு மதுபாட்டில்களை உடைக்கும் காட்சிகளை சிறிது நேரம் பார்த்து கொண்டிருந்தனர். பின்னர் அவர்களில் ஒரு சிலர் வேகமாக உள்ளே சென்று மதுபாட்டில்களை எடுத்து தூக்கி வீசுவது போல் கடையை விட்டு வெளியே வந்தனர். ஆனால் மதுபாட்டில்களை உடைக்க மனமின்றி மதுபாட்டில்களுடன் அங்கிருந்து ஓடினர். இதை கண்டதும் மதுபிரியர்கள் பலரும் தைரியத்துடன் கடைக்குள் புகுந்து தங்கள் கையில் கிடைத்த மதுபாட்டில்களை வேட்டி மற்றும் துண்டில் சுருட்டி அள்ளிக்கொண்டு அங்கிருந்து ஓடினர்.


தொடர்புடைய செய்திகள்

1. குடும்பத்தகராறில் விபரீதம்; கணவன்- மனைவி தூக்குப்போட்டு தற்கொலை
ஓட்டேரியில் குடும்பத்தகராறில் கணவன்- மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர்.
2. மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகை
திருவொற்றியூரில் மின்வெட்டை கண்டித்து மின்வாரிய அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3. குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பொதுமக்கள் மறியல்
ஆர்.கே.பேட்டை அருகே குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
4. அந்தியூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல்
அந்தியூர் அருகே குடிநீர் வினியோகிக்க கோரி பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார்; சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார்
திருமணமான 3 மாதத்தில் இளம்பெண் தூக்கில் பிணமாக தொங்கினார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக தாய் போலீசில் புகார் செய்துள்ளார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை