பரங்கிப்பேட்டை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்


பரங்கிப்பேட்டை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம்
x
தினத்தந்தி 11 Feb 2019 4:01 AM IST (Updated: 11 Feb 2019 4:01 AM IST)
t-max-icont-min-icon

பரங்கிப்பேட்டை அருகே லஞ்சம் வாங்கிய ஊராட்சி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

பரங்கிப்பேட்டை, 

பரங்கிப்பேட்டை அருகே உள்ள மேலத்திருக்கழிப்பாலை ஊராட்சியில் ஊராட்சி செயலாளராக இருந்தவர் ராமர். இவர் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில் தொழிலாளர்களுக்கு பணிகள் வழங்குவதற்கு ஒவ்வொருவரிடமும் இருந்து லஞ்சம் வாங்கியதாக புகார் எழுந்தது.

இது குறித்து வட்டார வளர்ச்சி அதிகாரி தங்கத்திடம் தொழிலாளர்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து வட்டார வளர்ச்சி அதிகாரி தங்கம், மேலத்திருக்கழிப்பாலை ஊராட்சிக்கு சென்று தொழிலாளர்களிடம் விசாரணை நடத்தினார். விசாரணையில், ஊராட்சி செயலாளர் ராமர் லஞ்சம் வாங்கியது உண்மை என்று தெரிந்தது.

இதனை தொடர்ந்து ஊராட்சி செயலாளர் ராமர், நேற்று முன்தினம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை வட்டார வளர்ச்சி அதிகாரி தங்கம் பிறப்பித்தார்.

Next Story