மாவட்ட செய்திகள்

கடையநல்லூர் அருகே பரிதாபம் லாரி- மொபட் மோதல், பள்ளிக்கூட மாணவர் பலி + "||" + Near Kadayanallur Awful larry-mobot conflict, school student kills

கடையநல்லூர் அருகே பரிதாபம் லாரி- மொபட் மோதல், பள்ளிக்கூட மாணவர் பலி

கடையநல்லூர் அருகே பரிதாபம் லாரி- மொபட் மோதல், பள்ளிக்கூட மாணவர் பலி
கடையநல்லூர் அருகே லாரி- மொபட் மோதிக்கொண்ட விபத்தில் பள்ளிக்கூட மாணவர் பரிதாபமாக பலியானார். லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர், 

நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள மங்களாபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவில்பிள்ளை. இவருடைய மகன் சுந்தர் (வயது 16). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று அவர் தனது மொபட்டில் கடையநல்லூருக்கு சென்றுகொண்டிருந்தார்.

அட்டைக்குளம் அருகே சென்றபோது அந்த பகுதியில் வந்த லாரி எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இதில் மொபட்டில் இருந்து தூக்கி வீசப்பட்ட சுந்தர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த கடையநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை மீட்டு பரிசோதனைக்காக கடையநல்லூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது உடலை பார்த்து பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுதனர். இதுகுறித்து கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவர் மதுரையை சேர்ந்த இளையராஜாவை கைது செய்தனர். 

தொடர்புடைய செய்திகள்

1. தொப்பூர் அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதி 4 கார்கள் சேதம் 2 பேர் படுகாயம்
தொப்பூர் அருகே சுங்கச்சாவடியில் லாரி மோதியதில் 4 கார்கள் சேதம் அடைந்தன. காரில் வந்த 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
2. காஞ்சீபுரம் அருகே கார் மோதி பள்ளி மாணவன் பலி முதியவர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே சாலையோரம் நின்று கொண்டிருந்த மாணவன் மீது கார் மோதியதில் பரிதாபமாக உயிரிழந்தான். மேலும் உடன் நின்று கொண்டு இருந்த முதியவர் படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
3. மானாமதுரை அருகே, மின்னல் தாக்கி பள்ளி மாணவன் பலி
மானாமதுரை அருகே மின்னல் தாக்கி 6-ம் வகுப்பு மாணவன் பரிதாபமாக பலியானான்.
4. குன்னூர் அருகே, மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் சாவு
குன்னூர் அருகே மின்சாரம் தாக்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
5. லாரி மோதி பெண் படுகாயம் மணல் குவாரியில் கொட்டகைக்கு தீ வைப்பு தொழிலாளர்களை விரட்டியதால் பரபரப்பு
வெங்கல் அருகே சவுடு மண் ஏற்ற வந்த லாரி மோதியதில் பெண் படுகாயம் அடைந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் மணல் குவாரியில் இருந்த கொட்டகையை தீ வைத்து எரித்தனர். மேலும் அங்கிருந்த தொழிலாளர்களை பொதுமக்கள் விரட்டியடித்தனர்.