மாவட்ட செய்திகள்

கோட்டக்குப்பத்தில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது + "||" + In kottakkuppat Four arrested in the theft case

கோட்டக்குப்பத்தில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது

கோட்டக்குப்பத்தில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது
கோட்டக்குப்பத்தில் திருட்டு வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம், 

கோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருட்செல்வன் தலைமையிலான போலீசார், சின்னகோட்டக்குப்பம் பகுதியில் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்றுகொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சின்னகோட்டக்குப்பத்தை சேர்ந்த குமரேசன் (வயது 22), ஷாகுல்அமீது (26), பெரிய முதலியார்சாவடி செந்தில்குமார் (19), புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த அப்பு (19) என்பதும், இவர்கள் 4 பேரும் சேர்ந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு சின்னகோட்டக்குப்பத்தில் உள்ள கோகாஸ்படேல் (62) என்பவருடைய வீட்டின் ஜன்னலில் போடப்பட்டிருந்த கொசுவலையை நீக்கிவிட்டு அதன் அருகில் மேஜை மீது வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும் செல்போனை திருடியது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து குமரேசன், செந்தில்குமார், அப்பு, ஷாகுல்அமீது ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் 4 பேரையும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோடி திட்டத்தின் கீழ் கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ய முயற்சி
நாகையில் மோடி திட்டத்தின் கீழ் கடன் வாங்கி தருவதாக கூறி மோசடி செய்ய முயன்ற 2 பெண்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
2. திருட்டு வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது - வாலாஜாவை சேர்ந்தவர்கள்
திருட்டு வழக்கில் வாலாஜாவை சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
3. விழுப்புரம் அருகே ரூ.12 லட்சம் ரேஷன் அரிசியை மாவாக்கி லாரியில் கடத்த முயற்சி
விழுப்புரம் அருகே ரூ.12 லட்சம் மதிப்புள்ள ரேஷன் அரிசியை மாவாக்கி லாரியில் கடத்த முயன்ற 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
4. போடியில், திருட்டு வழக்கில் வாலிபர் கைது; 16 பவுன் நகைகள் மீட்பு
போடியில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். அவர் கொடுத்த தகவலின் பேரில் 16 பவுன் நகை மீட்கப்பட்டது.
5. கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர்கள் உள்பட 4 பேர் கைது
கம்பம் காட்டுப்பள்ளிவாசல் அருகே கேரளாவுக்கு கஞ்சா கடத்தியவர்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.