மாவட்ட செய்திகள்

நீடாமங்கலம் அருகே இருதரப்பினர் மோதல்; கணவன்-மனைவி படுகாயம் 5 பேர் மீது வழக்குப்பதிவு + "||" + Bilateral conflict near hydroelectric The husband and wife are going to be jailed for 5 people

நீடாமங்கலம் அருகே இருதரப்பினர் மோதல்; கணவன்-மனைவி படுகாயம் 5 பேர் மீது வழக்குப்பதிவு

நீடாமங்கலம் அருகே இருதரப்பினர் மோதல்; கணவன்-மனைவி படுகாயம் 5 பேர் மீது வழக்குப்பதிவு
நீடாமங்கலம் அருகே இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் கணவன்-மனைவி படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகேயுள்ளது அய்யம்பேட்டை கிராமம். இந்த கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாபு. இவருடைய மகன் பிரகாஷ்(வயது33). விவசாயி. இவருக்கும், இவருடைய சித்தப்பா மோகன்தாஸ் என்பவருக்கும் வேலி அமைப்பதில் முன்விரோதம் இருந்து வருகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று பிரகாசுக்கும், மோகன்தாசுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் இருதரப்பினரும் மோதி கொண்டனர். இதில் பிரகாஷ் மற்றும் அவருடைய மனைவி அபிநயா ஆகிய 2 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மன்னார்குடி அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

5 பேர் மீது வழக்கு

இதுகுறித்து இருதரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் மோகன்தாஸ், விக்னேஷ். தினேஷ், பிரகாஷ், அபிநயா ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவில் கரகம் எடுப்பதில் மோதல்; கிராம மக்கள் சாலைமறியல்
பாலக்கோடு அருகே கோவில் திருவிழாவில் கரகம் எடுப்பதில் மோதலையடுத்து ஒரு தரப்பினர் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
2. செங்கிப்பட்டி அருகே கோஷ்டி மோதல்; வாலிபர் மண்டை உடைந்தது 6 பேர் கைது
செங்கிப்பட்டி அருகே குடும்ப தகராறில் கோஷ்டி மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு வாலிபரின் மண்டை உடைந்தது. இந்த மோதல் தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
3. டிராக்டர் மீது சரக்கு வேன் மோதல்; 3 பேர் பலி
பழனி அருகே டிராக்டர் மீது சரக்குவேன் மோதியதில் சிறுவன் உள்பட 3 பேர் பலியாகினர்.
4. பாபநாசம் அருகே, முன்விரோதத்தில் இருதரப்பினர் மோதல்; பெண்ணுக்கு கத்திக்குத்து 3 பேர் கைது
பாபநாசம் அருகே முன்விரோதத்தில் இருதரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பெண்ணுக்கு கத்திக்குத்து விழுந்தது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
5. மினி வேன்-மோட்டார் சைக்கிள் மோதல்: தாய், மகள் பரிதாப சாவு - சேந்தமங்கலம் அருகே சோகம்
மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி மினி வேன் மீது மோதியதில் தாய், மகள் பரிதாபமாக இறந்தனர்.

ஆசிரியரின் தேர்வுகள்...