சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி டிரைவர் உள்பட 35 பேர் காயம்


சரக்கு ஆட்டோ கவிழ்ந்து பெண் பலி டிரைவர் உள்பட 35 பேர் காயம்
x
தினத்தந்தி 12 Feb 2019 4:30 AM IST (Updated: 12 Feb 2019 1:44 AM IST)
t-max-icont-min-icon

ஜெயங்கொண்டம் பிரிவு பாதையில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது.

கீழப்பழுவூர், 

அரியலூர் மாவட்டம் குந்தபுரம் கிராமத்தை சேர்ந்த 35 பேர் ஒரு சரக்கு ஆட்டோவில் அரியலூர் ஒன்றியத்தை சேர்ந்த வைப்பம் கிராமத்தில் நடைபெற்ற ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்றனர். ஜெயங்கொண்டம் பிரிவு பாதையில் சென்று கொண்டிருக்கும் போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு ஆட்டோ சாலையோரம் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் டிரைவர் உள்பட மொத்தம் 36 பேர் காயம் அடைந்தனர். இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு அரியலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதில் சியாமளா(வயது 50) என்பவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மேலும் இளஞ்சியம்(65), செல்வமணி(45), கமலம்(45), அமராவதி(40) உள்பட 12 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கீழப்பழுவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story