வழக்குகளை கையாளுவது குறித்து போலீசாருக்கு ஓய்வு பெற்ற நீதிபதி பயிற்சி
அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு வழக்குகளை எப்படி கையாளுவது குறித்த பயிற்சி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நேற்று பெரம்பலூரில் நடந்தது.
பெரம்பலூர்,
அரியலூர்- பெரம்பலூர் மாவட்ட போலீசாருக்கு வழக்குகளை எப்படி கையாளுவது குறித்த பயிற்சி ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் நேற்று பெரம்பலூரில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனத்தில் நடந்தது. இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி சின்னப்பன் தலைமை தாங்கி, வழக்குகள், கோர்ட்டு வழக்குகளை எப்படி கையாளுவது குறித்தும், நிலுவையில் வழக்குகளை விரைந்து முடிப்பது குறித்தும் போலீசாருக்கு பயிற்சி வழங்கினார். இதில் பெரம்பலூர் கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு ரெங்கராஜ் தலைமையில் பெரம்பலூர் மாவட்டத்தில் பணிபுரியும் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அரியலூர் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பெரியய்யா தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், மற்றும் கோர்ட்டு வழக்குகளுக்கு செல்லும் போலீசார் என 90 பேர் பங்கேற்று பயிற்சி பெற்றனர். காலையில் தொடங்கிய இந்த பயிற்சி மாலை வரை நடந்தது.
Related Tags :
Next Story