மாவட்ட செய்திகள்

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம் + "||" + Perambalur Brahmapureeswarar temple is celebrated with the flag hooping of the Massimam festival

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பெரம்பலூர் பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
பெரம்பலூர் பிரம்ம புரீஸ்வரர் கோவில் மாசிமக பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரம்பலூர், 

பெரம்பலூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் மாசி மக பெருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை முன்னிட்டு நேற்று முன்தினம் அனுக்கை, விக்னேஸ்வரபூஜை, வாஸ்துசாந்தி ஆகியவை நடைபெற்றது. நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு சுவாமி- அம்பாள் உற்சவர் சிலைகள் வண்ணமலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருச்செங்கோடு சுவாமிநாத சிவாச்சாரியார் தலைமையில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் ஓத, சோடஷ பூஜைகளும், நெய்தீப, கற்பூரதீப மகா ஆராதனையும் நடந்தது. அதனை தொடர்ந்து சுவாமி- அம்பாள் சிலைகள் கொடிமரம் முன்பாக பல்லக்கில் நிறுத்தி வைக்கப்பட்டு கொடியேற்றப்பட்டது. இதில் சுற்றுப்பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதில் கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு சிம்மவாகனத்தில் சுவாமி புறப்பாடும், நாளை (புதன்கிழமை) சேஷவாகனம், 14-ந் தேதி சூரியபிரபை வாகனம், சந்திரபிரபை வாகனம், 15-ந் தேதி பஞ்ச மூர்த்திகள் புறப்பாடு, 16-ந் தேதி யானை வாகனத்தில் சுவாமி வீதிஉலா, 17-ந் தேதி மாலை 4 மணி முதல் 6.30 மணிக்குள் திருக்கல்யாண உற்சவம், புஷ்பக விமானத்தில் சுவாமி புறப்பாடு, 18-ந் தேதி கைலாச வாகனம், 19-ந் தேதி தேரோட்டம் மற்றும் காலை 10.30 மணி முதல் 11 மணிக்குள் ரதா ரோஹணம் நிகழ்ச்சி நடக்கிறது. வருகிற 20-ந் தேதி கொடியிறக்கம் மற்றும் தீர்த்தவாரி நிகழ்ச்சியும், 21-ந் தேதி ரிஷபவாகனத்தில் சுவாமி வீதிஉலாவும் நடக்கிறது. 22-ந் தேதி ஊஞ்சல் உற்சவமும், 23-ந் தேதி மஞ்சள் நீர் விடையாற்றி உற்சவத்துடன் விழா நிறைவு அடைகிறது. அதன்பிறகு 26-ந் தேதி திருத்தேர் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை அரியலூர் உதவி ஆணையரும், கோவில் தக்காருமான முருகையன், கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் திருப்பணியாளர்கள் செய்து வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. சித்திரை தேரோட்டத்தையொட்டி தஞ்சை பெரியகோவில் தேர் அலங்கார பணிகள் தொடக்கம்
சித்திரை தேரோட்டத் துக்காக தஞ்சை பெரியகோவில் தேர் அலங்கார பணிகள் தொடங்கப்படுவதையொட்டி பந்தக்கால் நடும் விழா நடைபெற்றது.
2. கும்பகோணத்தில் மாசிமக தீர்த்தவாரி: மகாமக குளத்தில் பல்லாயிரக்கணக்கானோர் புனித நீராடல்
கும்பகோணத்தில் மாசி மக தீர்த்தவாரியையொட்டி மகாமக குளத்தில் பல்லாயிரக் கணக்கானோர் புனித நீராடினார்கள்.
3. பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசி மக திருவிழா: குதிரை சிலைக்கு காகித மாலைகள் குவிந்தன
பெருங்காரையடி மீண்ட அய்யனார் கோவில் மாசிமக திருவிழாவில், குதிரை சிலைக்கு காகித மாலைகளை அணிவித்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
4. திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் திரளான பக்தர்கள் வடம் பிடித்தனர்
திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு வடம் பிடித்தனர்.
5. திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
திருக்கண்ணபுரம் சவுரிராஜ பெருமாள் கோவிலில் மாசிமக விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.