மாவட்ட செய்திகள்

வாக்காளர் சரிபார்ப்பு-தணிக்கை எந்திரம் குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனம் + "||" + Awareness campaign vehicle on voter verification and censorship

வாக்காளர் சரிபார்ப்பு-தணிக்கை எந்திரம் குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனம்

வாக்காளர் சரிபார்ப்பு-தணிக்கை எந்திரம் குறித்து விழிப்புணர்வு பிரசார வாகனம்
வாக்காளர் சரிபார்ப்பு, தணிக்கை எந்திரம் குறித்த விழிப்புணர்வு பிரசார வாகனங்களை மாவட்ட வருவாய் அதிகாரி தொடங்கி வைத்தார்.
கரூர், 

வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தணிக்கை எந்திரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான பிரசார வாகனங்களை தொகுதிவாரியாக அனுப்பிவைக்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கரூர் மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலரும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் அரசுச்செயலருமான விஜயராஜ்குமார் முன்னிலையில், மாவட்ட வருவாய் அதிகாரி சூர்யபிரகாஷ் கொடியசைத்து விழிப்புணர்வு பிரசார வாகனங்களை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

வாக்காளர்கள் தாங்கள் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகியுள்ளதா? என்பதை உறுதி செய்து கொள்ளும் வகையில், வரும் நாடாளுமன்ற தேர்தல் 2019-ல் வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தணிக்கை எந்திரம் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பயன்படுத்தப்பட உள்ளது. இது தொடர்பாக வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு மற்றும் பயிற்சி அளிக்கும் வகையில் கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும், ஒவ்வொரு தொகுதிக்கும் தலா 6 வாகனங்கள் வீதம் மொத்தம் 24 வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாகனத்திலும் வாக்காளர்களுக்கு செயல் விளக்கம் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்த இரண்டு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் கரூர் மாவட்டத்தில் 608 வாக்குச்சாவடி அமைவிடங்களில் உள்ள 1031 வாக்குச்சாவடி மையங்களிலும் வாக்களிக்க உள்ள வாக்காளர்களுக்கு அந்தந்த பகுதிக்கே சென்று செயல் விளக்கம் அளிக்க உள்ளனர்.

இதில் ஒவ்வொரு குழுவினரும் நாள் ஒன்றுக்கு நான்கு வாக்குச்சாவடி அமைவிடங்களுக்கு சென்று செயல் விளக்கம் அளிக்க உள்ளனர். மேலும், வாக்காளர்கள் இம்முகாமின்போது மாதிரி வாக்குப்பதிவு செய்து தாங்கள் வாக்களித்த சின்னத்திற்கு வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை வாக்காளர் சரிபார்ப்பு மற்றும் தணிக்கை எந்திரத்தில் சரிபார்த்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில், கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர்்கள் சிவக்குமார் (தேர்தல் பிரிவு), ஈஸ்வரன்(கரூர்), ரவிக்குமார்(மண்மங்கலம்) மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. நாகையில் வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
நாகை கலெக்டர் அலுவலகத்தில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடு குறித்த விழிப்புணர்வு வாகனத்தை கலெக்டர் சுரேஷ்குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
2. பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் உள்ள பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் இரு சக்கர வாகனம் வழங்கப்பட்டு வருகிறது. இதில் விண்ணப்பிக்க நாளை (வியாழக்கிழமை) கடைசி நாளாகும்.
3. பெரம்பலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு பிரசார இயக்கம்
பெரம்பலூரில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்ப்பு பிரசார இயக்கம் நடைபெற்றது.
4. புயல் நிவாரண பொருட்களை ஏற்றி செல்ல முயன்ற வாகனத்தை சிறைபிடித்து கிராம மக்கள் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
திருவாரூர் அருகே புயல் நிவாரண பொருட்களை ஏற்றி செல்ல முயன்ற வாகனத்தை சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
5. மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனம் மீது வெடிகுண்டு வீச்சு; வீரர் பலி
மணிப்பூரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வாகனம் மீது நடந்த கையெறி வெடிகுண்டு வீச்சில் வீரர் ஒருவர் பலியானார்.

ஆசிரியரின் தேர்வுகள்...