குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் மாசி மக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
குளித்தலை கடம்பவனேசுவரர் கோவில் மாசி மக பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குளித்தலை,
கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரசித்தி பெற்ற கடம்பவனேசுவரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மக பெருந்திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்தாண்டும் மாசி மக பெருந்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கும், கோவில் கம்பத்திற்கும் நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
கொடியேற்றம்
இதனைதொடர்ந்து கோவில் கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டு மாசி மகபெருந்திருவிழா தொடங்கியது. பின்னர் சிறப்பு தீபாராதனைகள் நடந்தது. இரவு மஞ்சள் கேடயத்தில் சுவாமிவீதி உலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமிதரிசனம் செய்தனர். இக்கோவில் மாசி மக பெருந்திருவிழாவையொட்டி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் காலை மற்றும் இரவு வேளைகளில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பல்வேறு வாகனங்களில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடக்கிறது.
வருகிற 16-ந்தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 19-ந்தேதி தேரோட்டமும், 20-ந்தேதி கடம்பந்துறை காவிரி நதிக்கரையில் தீர்த்தவாரியும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story