ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அன்னை தெரசா காலனி, பூபாலராயர்புரம் பகுதி மக்கள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அங்கு நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தனித்தனியாக கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுக்களில் கூறிஇருப்பதாவது:-
எங்கள் பகுதியை சேர்ந்த பலர் ஸ்டெர்லைட் ஆலையில் பணியாற்றி வருகிறார்கள். தற்போது ஆலை மூடப்பட்டதால், வாழ்வாதாரம் இழந்து அன்றாட அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையின் மூலம் பல நலத்திட்ட உதவிகளையும் நாங்கள் பெற்று வருகிறோம். ஆகையால் தேசிய பசுமை தீர்ப்பாயம் மற்றும் உச்சநீதிமன்றம் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அளித்த பரிந்துரையை ஏற்று தமிழக அரசு ஆலையை திறந்து எங்கள் வாழ்வாதாரத்தை மீட்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story