தேவர்குளம் அருகே குடிநீர் குழாயில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி


தேவர்குளம் அருகே குடிநீர் குழாயில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 12 Feb 2019 4:00 AM IST (Updated: 12 Feb 2019 2:36 AM IST)
t-max-icont-min-icon

தேவர்குளம் அருகே குடிநீர் குழாயில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பரிதாபமாக பலியானார்.

பனவடலிசத்திரம், 

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள கல்லத்திக்குளத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 35) விவசாயி. இவர் நேற்று முன்தினம் காலை தனது மோட்டார் சைக்கிளில் மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தில் உள்ள உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சிக்கு சென்றார்.

பின்னர் மாலை அங்கிருந்து அதே மோட்டார் சைக்கிளில் தனது வீட்டிற்கு புறப்பட்டார். தேவர்குளம் அருகே உள்ள வன்னிக்கோனேந்தல் பகுதியில் சென்றபோது, அந்த பகுதியில் விருதுநகர் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் தண்ணீர் கொண்டு செல்வதற்காக போடப்பட்டிருந்த ராட்சத குழாய்கள் மீது எதிர்பாராதவிதமாக மோதினார்.

இதில் மாரியப்பன் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இதுகுறித்து தகவலறிந்த தேவர்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாரியப்பனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். மாரியப்பனுக்கு பிரேமா என்ற மனைவியும், சுசிலா (17), தாரணி (16) ஆகிய 2 மகள்களும் உள்ளனர். 


Next Story