மாவட்ட செய்திகள்

பொதுவாழ்க்கையில் நீடிக்க எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை - சித்தராமையா பேட்டி + "||" + Eightyarappa is not eligible to stay in public life - interview with Siddaramaiah

பொதுவாழ்க்கையில் நீடிக்க எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை - சித்தராமையா பேட்டி

பொதுவாழ்க்கையில் நீடிக்க எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை - சித்தராமையா பேட்டி
பொதுவாழ்க்கையில் நீடிக்க எடியூரப்பாவுக்கு தகுதி இல்லை என்று சித்தராமையா கூறினார். முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
பெங்களூரு, 

ஜனதா தளம்(எஸ்) எம்.எல்.ஏ. மகனுடன் எடியூரப்பா நடத்திய பேரம் குறித்த ஆடியோ வெளியானது. அந்த ஆடியோவில் இருப்பது தனது குரல் இல்லை என்று எடியூரப்பா முதலில் கூறினார். அதை நிரூபித்தால் ராஜினாமா செய்வதாக கூறினார். பிறகு, அது தனது குரல் தான் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

அதனால் பொதுவாழ்க்கையில் இருக்க அவருக்கு தகுதி இல்லை. ரூ.10 கோடியுடன் மந்திரி பதவி வழங்குவதாக எடியூரப்பா ஆசை வார்த்தைகளை கூறி இருக்கிறார். இது குதிரை பேரம் இல்லாமல் வேறு என்ன?. முதல்-மந்திரி பதவியில் இருந்தவர் குறைந்தபட்ச அறிவுகூட இல்லாமல் எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்க முயற்சி செய்கிறார். இது ஜனநாயக விரோதமானது.

பிரதமா் மோடி சென்ற இடமெல்லாம் பொய் பேசுகிறார். ரபேல் போர் விமான கொள்முதல் ஊழல் குறித்து அவர் வாய் திறப்பது இல்லை. விவசாய கடனை தள்ளுபடி செய்யுமாறு நான் முதல்-மந்திரியாக இருந்தபோது 2 முறை கோரிக்கை விடுத்தேன். அதை அவர் கண்டுகொள்ளவில்லை. அவருக்கு பொய் சொல்வதை தவிர வேறு எதுவும் தெரியாது.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. எடியூரப்பாவின் முதல்-மந்திரி ஆசை நிறைவேறாது குமாரசாமி நிச்சயம் பட்ஜெட் தாக்கல் செய்வார்
எடியூரப்பாவின் முதல்-மந்திரி ஆசை நிறைவேறாது என்றும், குமாரசாமி நிச்சயம் பட்ஜெட் தாக்கல் செய்வார் என்றும் சித்தராமையா கூறினார்.
2. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பா.ஜனதா பேரம் - சித்தராமையா குற்றச்சாட்டு
காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களுக்கு தலா ரூ.60 கோடி வழங்க பா.ஜனதா பேரம் பேசியதாக சித்தராமையா பரபரப்பு குற்றச்சாட்டை கூறி இருக்கிறார்.
3. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்லமாட்டார்கள் : சித்தராமையா சொல்கிறார்
கூட்டணி ஆட்சிக்கு எந்த ஆபத்தும் இல்லை என்றும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பா.ஜனதாவுக்கு செல்ல மாட்டார்கள் என்றும் முன்னாள் முதல்-மந்திரி சித்த ராமையா தெரிவித்துள்ளார்.
4. எனக்கும், பரமேஸ்வருக்கும் கருத்து வேறுபாடு இல்லை : சித்தராமையா பேட்டி
போலீஸ் துறையை விட்டுக்கொடுக்கும்படி பரமேஸ்வரிடம் நான் கேட்கவில்லை. எனக்கும், பரமேஸ்வருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்று சித்தராமையா தெரிவித்தார்.
5. சித்தராமையாவின் வெளிநாட்டு பயணம் பாதியிலேயே ரத்து : பெங்களூரு திரும்பினார்
எஸ்.ஆர்.பட்டீலுக்கு கர்நாடக மேல்-சபை தலைவர் பதவி கிடைக்காததால், சித்தராமையா தனது வெளிநாட்டு பயணத்தை திடீரென பாதியிலேயே ரத்து செய்துவிட்டு பெங்களூரு திரும்பினார்.

ஆசிரியரின் தேர்வுகள்...