விமானப்படை தளத்தில் வேலைவாய்ப்பு


விமானப்படை தளத்தில் வேலைவாய்ப்பு
x
தினத்தந்தி 12 Feb 2019 12:11 PM GMT (Updated: 12 Feb 2019 12:11 PM GMT)

மத்திய பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படும் நிறுவனங்களில் ஒன்று இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட்.

ராணுவத்துக்கு தேவையான விமானங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பு, பழுது நீக்குதல் பணியில் இந்த நிறுவனம் ஈடுபடுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அசிஸ்டன்ட், ஆபரேட்டர் போன்ற பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

எம்.காம். படித்தவர்கள் அட்மின் அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். மெக்கானிக்கல், சிவில் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு அலுவலக உதவியாளர் பணியிடங்களில் வாய்ப்பு உள்ளது.

10-ம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் பிட்டர், எலக்ட்ரீசியன், எலக்டரானிக்ஸ் மெக்கானிக், இன்ஸ்ட்ருமென்ட் மெக்கானிக் பிரிவுகளில் ஐ.டி.ஐ. படித்தவர்கள், என்.ஏ.சி. பயிற்சி சான்றிதழ் பெற்றவர்கள் ஆபரேட்டர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் 1-1-2019-ந் தேதியில் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் ரூ.200 கட்டணமாக செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். பிப்ரவரி 13-ந் தேதிக்குள் இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்க வேண்டும்.

இது பற்றிய விவரங்களை https://hal-india.co.in/ என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

ராணுவத்துக்குத் தேவையான எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை உற்பத்தி செய்யும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் எலக்ட்ரானிக்ஸ் என்ஜினீயர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. நேரடி நேர்காணல் அடிப்படையில் மொத்தம் 26 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேசன், கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் அண்ட் டெலிகம்யூனிகேசன், டெலிகாம் என்ஜினீயரிங் போன்ற பிரிவுகளில் பி.இ., பி.டெக் படித்தவர்கள் இந்த நேர்காணலில் பங்கேற்று பணிவாய்ப்பு பெறலாம்.

விண்ணப்பதாரர்கள் 31-1-2019-ந் தேதியில் 25 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். வயதுவரம்பு தளர்வு மத்திய அரசு விதிகளின்படி அனுமதிக்கப்படுகிறது. விருப்பமும் தகுதியும் உள்ளவர்கள் தேவையான சான்றுகளுடன் நேர்காணலில் பங்கேற்கலாம், எழுத்துத் தேர்வும் நடத்தப்படும். உத்தரபிரதேச மாநிலம் ஹாஜியாபாத்தில் பிப்ரவாி 20,21ந்தேதிகளில் நேர்காணல் - எழுத்துத் தேர்வு நடக்கிறது.

விருப்பமுள்ளவர்கள் விரிவான விவரங்களை http://bel-india.in/ என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு நேர்காணலில் பங்கேற்கலாம்.

Next Story