தேவதானம், பெரும்பேடு கிராமங்களில் ரூ.1 கோடியே 20 லட்சத்தில் சுயஉதவி குழுக் கட்டிடங்கள்
ஊரக பகுதிகளில் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்டிடங்கள் கட்ட திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
பொன்னேரி,
தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின் கீழ் ஊரக பகுதிகளில் சுய உதவிக்குழுக்களின் கூட்டமைப்பை வலுப்படுத்தும் வகையில் புதிய கட்டிடங்கள் கட்ட திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார். அதன்படி தலா 4,679 சதுர அடியில் அரங்குகள், பயிற்சி அறை, அலுவலகம், பதிவு அறை மற்றும் தரைதளம் கூடிய கட்டிடம், தேவதானம் மற்றும் பெரும்பேடு கிராமங்களில் கட்டுவதற்கு ரூ.1 கோடியே 20 லட்சம் ஒதுக்கப்பட்ட நிலையில் அதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
இந்த விழாவுக்கு மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் வேதநாயகம், ஆணையாளர் கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொன்னேரி எம்.எல்.ஏ. சிறுணியம் பலராமன் தலைமை தாங்கி பூமி பூஜை செய்து கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.இந்த விழாவில் கூட்டுறவு சங்க தலைவர் பானுபிரசாத், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் நாகராஜ், சீனிவாசன், சார்லஸ், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் மோகனவடிவேல், ஒன்றிய அலுவலர்கள், ஊராட்சி செயலாளர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story