மாவட்ட செய்திகள்

பாலகிருஷ்ணாபுரத்தில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டைக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்குமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு + "||" + Bus transport from Balakrishnan to Mannargudi and Pattukottai Village people expectation

பாலகிருஷ்ணாபுரத்தில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டைக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்குமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு

பாலகிருஷ்ணாபுரத்தில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டைக்கு பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்குமா? கிராம மக்கள் எதிர்பார்ப்பு
பாலகிருஷ்ணாபுரத்தில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டைக்கு பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
கோட்டூர்,

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ளது பாலகிருஷ்ணாபுரம் கிராமம். சித்தமல்லி ஊராட்சிக்கு உட்பட்ட இந்த கிராமத்தில் இருந்து மன்னார்குடி, தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு பஸ் போக்குவரத்து நடைபெற்று வந்தது. மன்னார்குடிக்கு பெருகவாழ்ந்தான் வழியாகவும், பட்டுக்கோட்டைக்கு முத்துப்பேட்டை வழியாகவும் பஸ் இயக்கப்பட்டது. இந்த நிலையில் பாலகிஷ்ணாபுரம் சாலையில் உள்ள பாலம் சேதம் அடைந்ததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.


இந்த பாலம் தற்போது சீரமைக்கப்பட்டு விட்டது. ஆனாலும் பஸ் போக்குவரத்து மீண்டும் தொடங்கப்படவில்லை. இதனால் கிராம மக்கள் மன்னார்குடி, பட்டுக்கோட்டை, முத்துப்பேட்டை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்வதற்கு சிரமப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் பாலாகிருஷ்ணாபுரத்தில் இருந்து மன்னார்குடி, பட்டுக்கோட்டைக்கு பஸ் போக்குவரத்தை மீண்டும் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:-

பாலகிருஷ்ணாபுரம் நால்ரோட்டில் இருந்து காலை 8 மணி, மதியம் 1 மணி, மாலை 6 மணி என ஒரு நாளைக்கு 3 வேளை மன்னார்குடிக்கு பஸ் போக்குவரத்து நடைபெற்று வந்தது. பட்டுக்கோட்டைக்கு காலை 7 மணிக்கும், மாலை 5 மணிக்கும் பஸ் இயக்கப்பட்டது. பாலகிருஷ்ணாபுரம் சாலையில் உள்ள பாலம் பழுதடைந்ததால் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பாலத்தை சீரமைத்து 2 ஆண்டுகள் ஆகின்றன. ஆனால் பஸ் போக்குவரத்தை தொடங்க நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் சோத்திரியம், பட்டவெளி, வெங்குழி, செருகளத்தூர், வண்டல்வெளி, பாலகிருஷ்ணாபுரம் மேல்பாதி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பஸ் போக்குவரத்து இல்லாததால் மன்னார்குடி, முத்துப்பேட்டை, பட்டுக்கோட்டை ஆகிய ஊர்களில் படிக்கும் 150-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து வேறு ஊர்களுக்கு சென்று அங்கிருந்து பஸ் பிடித்து செல்கிறார்கள். இது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தியும் பலன் இல்லை. இந்த மாதத்துக்குள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பஸ் இயக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் அரசியல் கட்சிகளின் துணையுடன் தொடர்ந்து போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். இவ்வாறு கிராம மக்கள் கூறினர்.

தொடர்புடைய செய்திகள்

1. விக்கிரபாண்டியத்தில் ஆபத்தான மரப்பாலம் அகற்றப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
விக்கிரபாண்டியத்தில் ஆபத்தான மரப்பாலம் அகற்றப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
2. நன்னிலம் அருகே வளப்பாறு தூர்வாரப்படுமா? விவசாயிகள் எதிர்பார்ப்பு
நன்னிலம் அருகே உள்ள வளப்பாறு தூர்வாரப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
3. அரசு பள்ளிக்கு ரூ.2 லட்சம் சீர்வரிசை பொருட்கள் கிராம மக்கள் வழங்கினர்
அரசு பள்ளிக்கு கிராம மக்கள் ரூ.2 லட்சம் மதிப்புள்ள சீர்வரிசை பொருட்களை வழங்கினர்.
4. கீழத்தஞ்சாவூர்-பெரியகண்ணமங்கலம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
கீழத்தஞ்சாவூர்-பெரிய கண்ணமங்கலம் இடையே குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.
5. முளகுமூடு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்ற வேண்டும் கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு
முளகுமூடு பகுதியில் செயல்படும் டாஸ்மாக் கடையை உடனே அகற்றக்கோரி கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் திரண்டு வந்து மனு கொடுத்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை