பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அதிரடி சோதனை


பாளையங்கோட்டை சிறையில் போலீசார் அதிரடி சோதனை
x
தினத்தந்தி 13 Feb 2019 3:30 AM IST (Updated: 13 Feb 2019 1:09 AM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை சிறையில் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

நெல்லை, 

பாளையங்கோட்டை சிறையில் நேற்று போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தடை செய்யப்பட்ட எந்த பொருட்களும் சிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

அதிரடி சோதனை

தமிழகத்தில் உள்ள பல சிறையில் கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டதையொட்டி போலீஸ் டி.ஜி.பி. அனைத்து சிறைகளிலும் போலீசார் சோதனை நடத்தவேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார்.

இந்த உத்தரவின் பேரில் பாளையங்கோட்டை சிறையில் நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் பரமசிவன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராமையா, காளியப்பன் மற்றும் 75 போலீசார் நேற்று காலை 6 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனர். இந்த சிறையில் ஆயுள்தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட கைதிகள், போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் என 1000-க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டு உள்ளனர்.

தடைசெய்யப்பட்ட பொருட்கள்

இந்த கைதிகளின் ஒவ்வொரு அறைக்கும் போலீசார் சென்று அவர்களுடைய உடைமைகளை சோதனை நடத்தினார்கள். அப்போது கைதிகளிடம் செல்போன், கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்ட பொருட்கள் புழக்கத்தில் உள்ளதா? என துருவி துருவி சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனை 7.30 மணி வரை 1½ மணி நேரம் நடந்தது. இந்த சோதனையில் தடை செய்யப்பட்ட எந்த பொருளும் சிக்கவில்லை. இந்த சோதனையின் போது சிறை சூப்பிரண்டு கிருஷ்ணகுமார் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Next Story