மாவட்ட செய்திகள்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்ஆய்வுப்பட்ட பதிவுக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்பதிவாளர் சந்தோஷ்பாபு தகவல் + "||" + Manonmaniam Sundaranar University Apply for qualified examination for the inspection registration

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்ஆய்வுப்பட்ட பதிவுக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்பதிவாளர் சந்தோஷ்பாபு தகவல்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில்ஆய்வுப்பட்ட பதிவுக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்பதிவாளர் சந்தோஷ்பாபு தகவல்
நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்ட பதிவுக்கான தகுதித்தேர்வுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.
நெல்லை, 

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆய்வுப்பட்ட பதிவுக்கான தகுதித்தேர்வுக்கு மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பதிவாளர் சந்தோஷ் பாபு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஆய்வுப்பட்ட பதிவு தகுதி தேர்வு

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் பல்வேறு துறைகளில் உள்ள பாடப்பிரிவுகளில் இளம் முனைவர் (எம்.பில்), முனைவர் (பிஎச்.டி) பட்டப்பதிவுக்கான தகுதித் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. முதுகலை இறுதி பருவத்தில் பயிலும் மாணவர்களும் தகுதித்தேர்வில் கலந்துகொள்ளலாம். ஆனால் இளம் முனைவர் மற்றும் முனைவர் பட்டப்பதிவின் போதும் அவர்கள் முதுநிலையில் தேர்ச்சி பெற்று இறுதி மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் முனைவர் பட்டப்பதிவை இளம் முனைவர் பட்டம் கொண்டு பதிவு செய்ய விரும்புவர்கள் இளநிலை ஆராய்ச்சியிலும் தேர்ச்சி பெற்று இறுதி மதிப்பெண் பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும். இதுதொடர்பான பாடப்பிரிவுகள், அடிப்படை தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதித்தேர்வு தேதி மற்றும் அனுமதி நெறிமுறைகள் ஆகியன பல்கலைக்கழக இணையதளத்தில் ( http://www.msun-iv.ac.in ) கொடுக்கப்பட்டுள்ளது.

ஒரு வருடத்துக்கு...

நெட், செட், ஜெ.ஆர்.ஆப்., கேட் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தகுதித்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. தகுதித்தேர்வின் தேர்ச்சியானது ஒரு வருடத்துக்கு மட்டும் செல்லுபடியாகும். இதுகுறித்த விவரங்களை பல்கலைக்கழக இணையதளத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட தகுதித்தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள், இப்பல்கலைக்கழக இணையதளத்தில் உள்ள ஆராய்ச்சி பிரிவு பகுதியின் இணையதள விண்ணப்பம் மூலமாக விண்ணப்பித்துக் கொள்ளலாம். இந்த தகுதித்தேர்வுக்கான கட்டண தொகை ரூ.1000 ஆகும். அடுத்த மாதம் (மார்ச்) 20-ந் தேதி தேர்வு நடக்கிறது. பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அடுத்த மாதம் 8-ந் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


அதிகம் வாசிக்கப்பட்டவை