மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் + "||" + The lawyer association demonstrated in the bathroom urging demands

கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலையில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலி யுறுத்தி குளித்தலையில் வக்கீல் சங்கத்தினர் ஆர்ப் பாட்டம் நடத்தினர்.
குளித்தலை,

குளித்தலை வக்கீல் சங்க பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில், நாட்டில் உள்ள அனைத்து வக்கீல் சங்கங் களுக்கும், தனி அலுவலக அறை, தேவையான உட்கட்டமைப்பு கட்டிடங்கள், இருக்கை வசதிகளோடு கூடிய நூலகம், இணையதள வசதியுடன் கூடிய கணினி அறை, மகளிருக்கான தனி இருக்கை வசதிகள், பெண் வக்கீல்களுக்கு தனி கழிப்பறை ஆகியவை செய்து தரப்படவேண்டும். ரூ.5 ஆயிரம் கோடியை வக்கீல்கள் நலனுக்காக மத்திய அரசின் வருடாந்திர வரவு செலவு அறிக்கையில் கீழ்கண்ட தேவைகளை நிறைவேற்றிடும் பொருட்டு ஒதுக்கீடு செய்ய வேண்டும். வக்கீல் களுக்கும், அவர்களின் குடும்பத்தாருக்கும் காப்பீடு திட்டம் செயல்படுத்த வேண்டும்.


புதிதாக பதிவு செய்த வக்கீல்களின் தேவைக்கேற்ப மாதாந்திர உதவித்தொகை 5 வருடங்களுக்கு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வலியுறுத்தி நேற்று ஒருநாள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, கோரிக்கைகளை வலியுறுத்தி குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பு வக்கீல் சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு வக்கீல் சங்கத் தலைவர் சாகுல்அமீது தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார். அதனைத் தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி ஒருநாள் கோர்ட்டு புறக்கணிப்பில் ஈடுபடுவதாக அறிவித்த அவர்கள் தங்கள் கோரிக்கை அடங்கிய மனுவை குளித்தலை கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் முருகனிடம் வழங்கினார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பட்டாசு தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருச்சி கலெக்டர் அலுவலகம் அருகில் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
2. கோரிக்கைகளை வலியுறுத்தி பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி பெரம்பலூரில் பி.எஸ்.என்.எல். அதிகாரிகள்-ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
3. நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
நாகர்கோவிலில் பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
4. சம்பள உயர்வு கோரி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
சம்பள உயர்வு கோரி ரப்பர் தோட்ட தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
5. சிறுபான்மை கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
திருச்சி சிந்தாமணி அண்ணா சிலை அருகே தேசிய சிறுபான்மையினர் கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆசிரியரின் தேர்வுகள்...