பேரம் பேசிய ஆடியோ விவகாரம்: எடியூரப்பா மீது போலீசில் புகார் காங்கிரசார் கொடுத்தனர்


பேரம் பேசிய ஆடியோ விவகாரம்: எடியூரப்பா மீது போலீசில் புகார் காங்கிரசார் கொடுத்தனர்
x
தினத்தந்தி 13 Feb 2019 3:45 AM IST (Updated: 13 Feb 2019 2:57 AM IST)
t-max-icont-min-icon

பேரம் பேசிய ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக எடியூரப்பா மீது வினோபாநகர் போலீஸ் நிலையத்தில் காங்கிரசார் புகார் கொடுத்தனர்.

சிவமொக்கா, 

பேரம் பேசிய ஆடியோ வெளியான விவகாரம் தொடர்பாக எடியூரப்பா மீது வினோபாநகர் போலீஸ் நிலையத்தில் காங்கிரசார் புகார் கொடுத்தனர்.

ேபரம் பேசும் ஆடியோ

முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியை கவிழ்க்க பா.ஜனதா தலைவர் எடியூரப்பா முயற்சி செய்து வருவதாக காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் ஜனதாதளம்(எஸ்) கட்சியை சேர்ந்த நாகனகவுடா எம்.எல்.ஏ. மகன் ஷரண் கவுடாவிடம் எடியூரப்பா பேரம் பேசுவது போன்ற ஆடியோவை முதல்-மந்திரி குமாரசாமி வெளியிட்டார். ஆடியோவில் இருப்பது எனது குரல் அல்ல என்று முதலில் மறுத்த எடியூரப்பா பின்னர் ஆடியோவில் இருப்பது எனது குரல் தான் என்று ஒப்புக் கொண்டார்.

போலீசில் புகார்

இந்த நிலையில் சிவமொக்கா டவுன் வினோபா நகர் போலீஸ் நிலையத்தில் நேற்று காங்கிரசார், எடியூரப்பா மீது ஒரு புகார் மனுவை கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கர்நாடக மக்கள் ஜனநாயக முறையில் வாக்களித்து மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைய வழிவகுத்து உள்ளனர். ஆனால் கூட்டணி ஆட்சியை கலைக்க பா.ஜனதா தலைவர் எடியூரப்பா தொடர்ந்து முயற்சி செய்து வருகிறார். ஜனதாதளம்(எஸ்) எம்.எல்.ஏ.வை இழுக்க அவர் பேரம் பேசிய ஆடியோ வெளியாகி உள்ளது. பேரம் பேசியதை எடியூரப்பா ஒப்புக் கொண்டு உள்ளார். இதனால் அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது. அந்த மனுவை போலீசார் பெற்றுக் கொண்டனர்.

Next Story