அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் உண்டியலில் ரூ.7.71 லட்சம் காணிக்கை


அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் உண்டியலில் ரூ.7.71 லட்சம் காணிக்கை
x
தினத்தந்தி 12 Feb 2019 10:15 PM GMT (Updated: 12 Feb 2019 10:22 PM GMT)

அதியமான்கோட்டை காலபைரவர் கோவில் உண்டியலில் ரூ.7.71 லட்சம் காணிக்கை இருந்தது.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டையில் பிரசித்தி பெற்ற தட்சணகாசி காலபைரவர் கோவில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மாதந்தோறும் தேய்பிறை அஷ்டமியையொட்டி நடக்கும் சிறப்பு வழிபாட்டில் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு நடத்துகிறார்கள். இந்த கோவிலில் உள்ள உண்டியல் 3 மாதத்திற்கு ஒரு முறை திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்படுவது வழக்கம்.

அதன்படி நேற்று கோவில் உண்டியலில் இருந்த பணத்தை எண்ணும் பணி நடைபெற்றது. இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் நித்யா, நகைமதிப்பீடு உதவி ஆணையர் குமரேசன், ஆய்வாளர் இந்திரா, செயல்அலுவலர் சித்ரா, அர்ச்சகர் கிருபாகரன் ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு உள்ளே இருந்த ரூபாய் நோட்டுகள் மற்றும் சில்லரை காசுகள் எண்ணப்பட்டன. கோவில் பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள், சிவபக்தர்கள் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்டனர். போலீசார் கண்காணிப்புடன் நடந்த இந்த பணியின் முடிவில் மொத்தம் ரூ.7 லட்சத்து 71 ஆயிரத்து 983 இருந்தது. மேலும் 1.500 மில்லிகிராம் தங்ககாசுகளும், 92 கிராம் வெள்ளியும் உண்டியலில் இருந்தன. இவை அனைத்தும் கோவில் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டன.

Next Story