மாவட்ட செய்திகள்

நீரில் இயங்கும் பிளாஷ் லைட் + "||" + Flashlight running in water

நீரில் இயங்கும் பிளாஷ் லைட்

நீரில் இயங்கும் பிளாஷ் லைட்
வழக்கமாக டார்ச் லைட்டுகள் பேட்டரி அல்லது சார்ஜர் மூலம் இயங்கும். ஆனால் முற்றிலும் தண்ணீரை எரிபொருளாக்கி இயங்கும் டார்ச் லைட்டை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா?
தண்ணீரில் இருந்து மின்சாரம் தயாரிக்க முடியும் என்று பள்ளியில் படித்திருக்கிறோம் அல்லவா. அதை செயல்படுத்திக் காட்டி இருக்கின்றனர் ‘ஹைட்ராலைட்’ என்கிற இந்த சாதனத்தின் மூலம்.சாதாரண தண்ணீர், சுத்திகரிக்கப்பட்ட நீர் , உப்பு தண்ணீர் என்று எந்த வகையான தண்ணீரிலும் இயங்கும். டார்ச் லைட்டாக மட்டுமின்றி நல்ல வெளிச்சம் தரும் லாந்தர் போன்றும் செயல்படும்.

இதில் இருக்கும் பேட்டரியை எடுத்து பத்து முதல் பன்னிரெண்டு வினாடிகள் நீரில் முக்கினால் போதும், தொடர்ந்து நூறு மணி நேரம் எரியும். ஒரு பேட்டரியின் ஆயுட்காலம் சுமார் முன்னூறு மணி நேரங்கள். அவசர நேரத்திற்கு கைகொடுக்கும் இந்த விளக்கை கேம்பிங், ட்ரெக்கிங் செல்லும் போது எடுத்து சென்றால் மிகவும் பயன்படும். சூரிய ஒளியில் இயங்கும் விளக்குகளை விட உபயோகிக்க எளிதாக இருக்கும். நீரில் இயங்குவதால் செலவும் மிச்சம். இதன் விலை ரூ.1,800.