படிகளில் ஏறும் சக்கர நாற்காலி
விபத்தில் கால்களை இழந்தவர்களுக்கும், இயற்கையிலே மாற்றுத் திறனாளியாக இருப்பவர்களுக்கும் சக்கர நாற்காலிகள் பெரிதும் உதவும்.
சக்கர நாற்காலியில் மோட்டார் பொருத்தப்பட்டு விரைவாக செல்லும் நாற்காலிகள் இருப்பது நாம் அறிந்ததே. ஆனால் சுவிட்சர்லாந்து நாட்டை சேர்ந்த ஒரு குழுவினர் பல வசதிகளுடன் சக்கர நாற்காலியை கண்டுபிடித்துள்ளனர். இதை நாற்காலி என்று சொல்வதை விட வாகனம் என்றே சொல்லலாம்.
எந்த வகையான தரையிலும் செல்லக்கூடிய வகையில் இதை வடிவமைத்துள்ளனர். ‘சிவோ’ என்றழைக்கப்படும் இதன் தனிச்சிறப்பு என்னவெனில் இதன் உதவியுடன் படிகளில் ஏறிச் செல்லலாம். வழியில் ஏதேனும் தடைகள் இருப்பினும் அதையும் தாண்டி செல்கிறது சிவோ.
அது மட்டுமின்றி ஓட்டுபவருக்கு ஏதேனும் பொருளை எடுக்க உயரம் தடையாக இருப்பின் அவரை அப்படியே அலாக்காக தூக்கிவிடுகிறது.
தனக்கு முன்னால் நின்று பேசுபவரின் உயரத்திற்கேற்ப அமர்ந்திருப்பவரின் உயரத்தை அமைத்து கொடுக்கிறது. உபயோகிக்காத போது இதன் கால்கள் தானே மடங்கிக் கொள்கின்றன. ஸ்மார்ட் யுகத்தில் ஸ்மார்ட் சக்கர நாற்காலி இது.
Related Tags :
Next Story