மாவட்ட செய்திகள்

மேம்படுத்தப்பட்ட போர்டு எண்டேவர் + "||" + Improved Ford Endeavor

மேம்படுத்தப்பட்ட போர்டு எண்டேவர்

மேம்படுத்தப்பட்ட போர்டு எண்டேவர்
அமெரிக்காவின் போர்டு நிறுவனம் தனது பிரபல எண்டேவர் எஸ்.யு.வி. மாடலில் புதிய மேம்படுத்தப்பட்ட மாடலை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது.
தற்போது உள்ள மாடல் 2016-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. இதனால் இந்தாண்டில் மேம்படுத்தப்பட்ட ரகத்தை அறிமுகம் செய்ய போர்டு முடிவு செய்துள்ளது. புதிய மாடலில் முன்புற பம்பர், கிரில், முகப்பு விளக்கு உள்ளிட்ட அனைத்துமே மாற்றம் செய்யப்பட்டு கம்பீரமான தோற்றத்துடன் விளங்குகிறது. டயமண்ட் கட் பினிஷுடன் 20 அங்குல அலாய் சக்கரங்கள் இதற்கு துணை புரிகின்றன. உள்புற இன்டீரியரிலும் மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளன. இன்போடெயின்மென்ட் பகுதியில் இப்போது கூடுதலாக போர்டு சிங் 3 இன்டர்பேஸ் உள்ளது. இது ஆப்பிள் கார் பிளேக்கு இணையானது. அத்துடன் ஆண்ட்ராய்டு ஆட்டோ வசதியும் உள்ளது.

பாதசாரிகள் திடீரென காரை கடந்தால் அதை உணர்ந்து உடனடியாக பிரேக் தாமாக செயல்படும் நுட்பமும் இதில் உள்ளது. வழக்கம்போல 2.2 லிட்டர் மற்றும் 3.2 லிட்டர் டீசல் என்ஜினுடன் இவை வெளிவந்துள்ளன. இவை பாரத் புகை விதி 6-க்கு இணையாக விளங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. 180 ஹெச்.டி. 420 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசை மற்றும் 213 ஹெச்.பி. மற்றும் 500 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையுடன் வெளிவந்துள்ளது.

மஹிந்திரா அல்டுராஸ், டொயோடா பார்ச்சூனர், மிட்சுபிஷி பஜெரோ ஸ்போர்ட் மற்றும் மேம்படுத்தப்பட்ட இசுஸூ எம்.யு.எக்ஸ். ஆகிய மாடலுக்கு கடும் போட்டியை இது ஏற்படுத்தும் என்று ஆட்டோமொபைல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.