வானவில் : வாட்ச்மேன் ரோபோ
பெரிய அலுவலகங்கள் மற்றும் வணிக வளாகங்களில் எத்தனை வாட்ச்மேன்கள் இருந்தாலும் போதாது.
. எல்லா பிரிவுகளையும் கண்காணிக்க அதிகமான ஆட்களை பணியமர்த்த வேண்டும். இந்த சிரமத்தைக் குறைப்பதற்காக டூரிங் வீடியோ என்னும் நிறுவனம் ஒரு ரோபோவை உருவாகியுள்ளது. இந்த ரோபோவிற்கு ‘நிம்போ’ என்று பெயர் வைத்திருக்கின்றனர். பதினோரு மணி நேரம் ஓயாமல் உழைக்கும் நிம்போ தானியங்கியாக செயல்படும். கட்டிடத்தின் எல்லா மூலைகளையும் சுற்றி வரும் நிம்போ யாரேனும் விதிகளை மீறினாலோ, ஏதேனும் தவறு செய்ய முற்பட்டாலோ உடனே பளரென விளக்கெரிந்து அலாரமும் எழுப்பிவிடும். இரு சக்கர சிறிய வாகனத்தில் ரோந்து பணி செய்யும் செக்வே எனப்படும் போலீசாரின் பணியை திறம்பட செய்கிறது இந்த ரோபோ. சிறிய இடங்களிலும் இந்த ரோபோவை பயன்படுத்தலாம்
Related Tags :
Next Story