குடிபோதையில் மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளி கைது
குடிபோதையில், மகளை பாலியல் பலாத்காரம் செய்த தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.
வாய்மேடு,
நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க கூலித் தொழிலாளிக்கு 2 மகள்கள். அந்த தொழிலாளியின் மனைவி வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இரண்டு மகள்களில் 14 வயதுடைய இளையமகள் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள்.
நேற்று முன்தினம் இரவு அந்த தொழிலாளி குடிபோதையில் வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அவர், தனது இளைய மகளிடம் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. உடனே அந்த சிறுமி சத்தம் போட்டாள். அவளது சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து சிறுமியை மீட்டு வேதாரண்யம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின் பேரில் வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த தொழிலாளியை கைது செய்தனர். இந்த சம்பவம் குறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடிபோதையில் 14 வயது மகளை தந்தையே பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Tags :
Next Story