கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு சிலை அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்


கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு சிலை அ.தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
x
தினத்தந்தி 14 Feb 2019 3:00 AM IST (Updated: 14 Feb 2019 12:44 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவிற்கு சிலை அமைப்பது என்று அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட கட்சி அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட அவைத் தலைவர் சைலேஷ் கிருஷ்ணன் தலைமை தாங்கினார். கிழக்கு மாவட்ட இணை செயலாளர் மனோரஞ்சிதம் நாகராஜ் எம்.எல்.ஏ., துணை செயலாளர் சாகுல் அமீது ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.பி. கலந்து கொண்டு பேசினார்.

கூட்டத்தில், மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோருக்கு கிருஷ்ணகிரியில் சிலை அமைப்பது, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம் முழுவதும் ஜெயலலிதாவின் பிறந்த நாளையொட்டி நலத்திட்ட உதவிகள் வழங்குவது.

பொங்கல் பரிசு ரூ.1,000 வழங்கியதிற்காக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. கஜா புயலில் சிறப்பாக செயல்பட்ட தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்வது. எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது. நாடாளுமன்ற தேர்தலுக்கு பூத் கமிட்டி அமைத்து வெற்றிக்கு பாடுபடுவது, நாடாளுமன்ற மற்றும் இடைத்தேர்தல்களில் அ.தி.மு.க. வெற்றிக்கு பாடுபடுவது என்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் முன்னாள் மாவட்ட செயலாளர்கள் முனிவெங்கடப்பன், காத்தவராயன், தென்னரசு, மாவட்ட மாணவர் அணி செயலாளர் கே.ஆர்.சி.தங்கமுத்து, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் பால்ராஜ், அண்ணா தொழிற்சங்க தலைவர் நாகராஜ், ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் சோக்காடி ராஜன், முனியப்பன், கிருஷ்ணன், அ.தி.மு.க. செயலாளர் பி.வாசுதேவன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் காவேரிப்பட்டணம் ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.

Next Story